தெறி படத்துல விஜய்க்கு ‘ரீல்’ பெண்ணா நடிச்ச பேபி இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க...

தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது வளர்ந்து க்யூட் பிரின்சஸ் ஆகிட்டாங்கனு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
vijay daughter
vijay daughter
Published on

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் கதாநாயகியாக உயர்ந்து ரசிகர்களின் உள்ளங்களில் எப்போதுமே தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் வளர்ந்து அவருக்கே ஜோடியாக எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில் நடித்தவர். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து, மீனாவை போலவே அவரது மகள் நைனிகாவும் 2016-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

அந்த படத்தில் இவரது குறும்பும், சேட்டைகளும் பலரை கவர்ந்தது. நைனிகாவும், அவரது அம்மாவை போலவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே மழலை கலந்த குரலில் பேசி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

meena daughter nainika
meena daughter nainika

தெறி படத்திற்கு பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் சுட்டிக்குழந்தையாக நடித்திருந்தார். இந்த இரு படங்களிலும் நடிக்கும் போது, நைனிகா 6 வயதை தாண்டியிருக்க மாட்டார். தொடர்ந்து மீனா எப்படி குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னாளில் ஹீரோயின் ஆனாரோ அதே போல நைனிகாவும் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த படங்களை அடுத்து அவர் பெரிதாக திரையுலகில் தலை காட்டாமல், தற்போது பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் நைனிகா தனது தாயார் மீனாவும் இருக்கும் புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது என்று ஆச்சரித்துடன் பார்த்து வருகின்றனர். அந்த சுட்டிக்குழந்தை நைனிகா அம்மாவை போலவே அழகாக நல்லா வளர்ந்துவிட்டாரே என்றும், எதிர்காலத்தில் அழகான அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஒரே நடிகருக்கு மகள், மனைவி, தாயாக நடித்த மீனா... யார் தெரியுமா?
vijay daughter

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் நைனிகா, தனது படிப்பை முடித்த பிறகு, தாயை போல் நடிக்க வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com