சைலண்டாக திருமணத்தை முடித்த குட்நைட் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

Meetha Raghunath
Meetha Raghunath

குட்நைட் பட நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் முடிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'முதல் நீ முடிவு நீ' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். அந்தப் படத்தில் கிஷன் தாஸுடன் இணைந்து நடித்திருந்தார். பள்ளி பருவ காதலை முன்னெடுத்து வெளியான இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இவர் மணிகண்டனுடன் நடித்த 'குட்நைட்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு குறட்டையால் தம்பதியினர் எவ்வளவு அவதிபடுகிறார்கள் என்பதை இயக்குனர் அழகாக காட்டியிருப்பார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்தடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாகவும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அதற்குள் திருமணமா என கமெண்ட் செய்து வந்தனர். ஒரு பக்கம் ரசிகர்கள் புலம்பினாலும், பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:
ஃபேண்டசி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்... யார் படம் தெரியுமா?
Meetha Raghunath

இந்த நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிந்ததாகவும், அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மீதா. மீதா ரகுநாத்தை திருமணம் செய்தவர் அவரது நீண்ட நாள் நண்பர் என்றும் இருவரும் சில வருடங்களாக காதலித்ததாக கூறப்படுகிறது. மீதா ரகுநாத்துக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே நிச்சயதாரதத்தை சைலண்டாக முடித்த நடிகை மீதா, திருமணத்தையும் யாருக்கும் தெரியாமல் முடித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com