எம்.ஜி.ஆர் - பத்மினி அண்ணன்-தங்கையாக நடித்த ஒரே படம்!

எம்.ஜி.ஆர் - பத்மினி
எம்.ஜி.ஆர் - பத்மினிSource:dinamalar
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த 'நாட்டியப் பேரொளி' பத்மினி அவருக்கு தங்கையாக நடித்த ஒரே திரைப்படம் 'அரசிளங்குமரி (1961). பொதுவாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான காதல் ஜோடிகள் அண்ணன் தங்கையாக நடிப்பது மிகவும் அபூர்வம். ஆனால் இந்தப் படத்தில் பத்மினி எம்ஜிஆருக்கு தங்கையாக நடித்துள்ளார். இவர்களுடன் எம்.என். நம்பியார், தங்கவேலு, அசோகன் மற்றும் முத்துராமன் (இதுதான் அவருக்கு முதல் படமாம்) ஆகியோரின் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் எம். சோமசுந்தரம் தயாரித்திருந்தார். கலைஞர் மு. கருணாநிதி கதை எழுதி வெளியான படம் இது.

எம்ஜிஆர் பத்மினி ஜோடி மதுரை வீரன், மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு போன்ற படங்களில் காதலர்களாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள். பிரித்தானிய எழுத்தாளர் ரஃபேல் சபாடினி எழுதிய 'ஸ்கேராமுச்சே' (Scaramouche) என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, 1952 இல் வெளியான அதே பெயர் கொண்ட ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலாக இப்படம் உருவாக்கப்பட்டது.

தமிழில் அரசிளங்குமரி எடுக்கப்பட்ட பொழுது அதில் அண்ணன் தங்கை பாசம் மிக முக்கியமான கருவாக இருந்தது. எம்ஜிஆர் கதையின் நாயகனாக (விவசாயி அறிவழகன்) நடிக்க ஒப்புக்கொண்ட பொழுது அவரது பாசம் மிகுந்த தங்கையாக 'அன்புக்கரசி' பாத்திரத்திற்கு பத்மினி மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் காதலர்களாகவே பார்த்துப் பழகிய மக்களால் எம்ஜிஆர் மற்றும் பத்மினியை திரையில் அண்ணன் தங்கையாக அக்காலத்து ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்தப் படம் அதிகமான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஜி. ராமநாதனின் சிறப்பான இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன.

எம்ஜிஆரை ராஜகுமாரி(1947) திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி என்பவர் தான் இந்த அரசிளங்குமரி திரைப்படத்தையும் இயக்கத் தொடங்கினார். ஆனால் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குனருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சாமி படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு பிரபல இயக்குனர் ஏ. காசிலிங்கம் அப்படத்தை இயக்கி முடித்தார்.

எம்.ஜி.ஆர் - பத்மினி
எம்.ஜி.ஆர் - பத்மினி

இயக்குனர் மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த நேரத்தை விட நீண்ட காலம் தயாரிப்பில் இருந்தது. எம்ஜிஆருக்கு ஜோடியாக ராஜசுலோச்சனா நடித்திருந்தார். ஜி ராமநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிதமான வரவேற்பையே பெற்றது.

ஒரு மன்னரின் குடும்பத்திற்கு ஏற்படும் துரோகத்தை மையமாக வைத்து, தங்கை மற்றும் அண்ணன் பாசத்தை விவரிக்கும் ஒரு அதிரடி வரலாற்றுத் திரைப்படமாக இது அமைந்தது. கொடுமைக்கார கணவனான நம்பியாருக்கும், பாசமுள்ள அண்ணனான எம்.ஜி.ஆருக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணின் வலியை பத்மினி தனது அசாத்திய நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆருக்கும், வில்லனாக நடித்த எம்.என். நம்பியாருக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான வாள் சண்டைக் காட்சி அக்கால ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி ஜி. ராமநாதன் இசையில் உருவான காலத்தால் அழியாத "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா" என்ற தத்துவப் பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது. எம்ஜிஆர் தனது கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பாடலாக இது இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்ற 'ஜுபிடர் பிச்சர்ஸ்' நிறுவனத்தின் இறுதித் தயாரிப்பு இந்த அரசிளங்குமரி ஆகும். இப்படம் வெளியான பிறகு அந்த நிறுவனம் மூடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
எம்ஜிஆர் ரெக்கார்டை அசால்ட்டாக உடைத்த தளபதி விஜய்... அப்படி என்ன செஞ்சாரு பாருங்க!
எம்.ஜி.ஆர் - பத்மினி
இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ஒரு போதையா? தேசிய விளையாட்டு எது? அதிரடி வசனங்களால் அதிரவைக்கும் புதிய படம் 'அங்கீகாரம்'!
எம்.ஜி.ஆர் - பத்மினி
logo
Kalki Online
kalkionline.com