விரைவில் சூது கவ்வும் 2... அடுத்தடுத்து வெளியாகும் பாடல்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Soodhu Kavvum 2
Soodhu Kavvum 2

சூது கவ்வும் 2ஆம் பாகம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வெளியான சூது கவ்வும் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2013ம் ஆண்டு வெளியான இந்தப் படம் புதுமுகங்களாக இருந்த அசோக் செல்வன் மற்றும் பாபி சிம்ஹாவை தமிழ் ரசிகர்களுக்கு எடுத்துக் காண்பித்தது. அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்தார். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சென்ற ஆண்டு சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பும், அந்தப் படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. மிர்ச்சி சிவா என்றாலே அவரது பந்தா கலந்த காமெடிதான். அதேபோல் சூது கவ்வும் படத்தின் ப்ளாட் என்றால் பணத்தைக் கொள்ளையடிக்கும் கதைதான். ஆகையால் இது மிர்ச்சி சிவாவின் காமெடிக்கு ஏற்ற படம் என்றே கூற வேண்டும். இதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் திரைக்கு வரும் துப்பாக்கி: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
Soodhu Kavvum 2

சிவா படங்களைப் பொறுத்தவரை ஹிட், ஃப்லாப் போன்றவை வெறும் பெயர்கள்தான். அதையும் தாண்டி ஒரு மன திருப்தியையும் மன நிம்மதியையும் தனது படங்களின் மூலம் கொடுப்பவர் சிவா. அதற்கு உதாரணங்களாகத் தமிழ்ப்படம் 1 மற்றும் 2, இடியட், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும், கலகலப்பு ஆகிய படங்களைக் கூறலாம். எம்.எஸ்.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை எஸ்.தியாகராஜன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்துத் தயாரிக்கின்றனர்.

இதனையடுத்து இந்தப் படத்தின் போஸ்டரை ராஜலட்சுமி இஞ்சினியரிங் காலேஜில் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். ஏனெனில் முதல் படத்தின் வெற்றிக்குக் காரணம் இளைஞர்கள் என்பதால். இதில் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியான நிலையில், என்ன நடக்கும் என்ற அடுத்த பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com