மிர்சி சிவா தான் BMW கார் வாங்கிய கதையையும், அது எப்படி காணாமல் போனது என்பதையும் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
வெங்கட் பிரபு படங்கள் மூலம் அறிமுகமானவர் மிர்சி சிவா. தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் மிர்சி சிவா. ஆகையாலயே அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது அவர் சூது கவ்வும் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருவதால், நேர்காணல்களில் கலந்துக்கொள்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் தனது வாழ்வில் நடந்த ஒரு மோசமான சம்பவத்தைக் குறித்து பேசியுள்ளார்.
மிர்சி சிவா ஒருமுறை கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அப்போது யுவன் இங்கு சென்று கார் வாங்கு என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். போகும்போது சிவாவிற்கு எந்த கார் வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் சென்றிருக்கிறார்.
அப்போது அந்த ஷோ ரூமில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தவர் சார் உங்க லெவலுக்கு BMW கார்தான் சார் சரியா இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதில் கன்வின்ஸ் ஆகி வாங்கியுள்ளார். ஆனால், ஒருமுறை கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் அவருடைய கார் அடித்துச் செல்லப்பட்டது என்று பேசியுள்ளார். மேலும் அவர், “அதில் கொஞ்சம் வருத்தம் தான் இருந்தாலும், அதையே யோசிச்சு பீல் பண்ணிட்டு இல்ல.
இயற்கை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்து வாங்கினேன், அதை இயற்கையே எடுத்துக்கொண்டது அவ்வளவு தான்.” என்று பேசியிருக்கிறார்.
எவ்வளவுதான் பணக்காரர்களாக இருந்தாலும், இப்படி ஒரு கார் அடித்துச் செல்லப்பட்டால் எதோ ஒரு பெரிய விஷயத்தை இழந்ததுபோல் தான் இருக்கும். ஆனால், இழப்பையும் ஒரு பாஸிட்டிவாக மாற்றி யோசித்திருக்கிறார் மிர்சி சிவா. படங்களின் மூலம் மக்களை சிரிக்க வைக்க தெரிந்த பலரால், உண்மையாக சந்தோஷமாக இருக்க முடியாது. ஆனால், இவர் மக்களையும் சிரிக்க வைக்கிறார், தன்னுடைய கஷ்டத்தையும் பாஸிட்டிவ்வாக மாற்றி சிரித்துக்கொள்கிறார்.
அவ்வளவுதான் சார் வாழ்க்கை!!!