சௌந்தர்யா மரணத்திற்கு இந்த பிரபல நடிகர்தான் காரணமாம்… வெளியான திடுக்கிடும் தகவல்!

Soundarya
Soundarya
Published on

நடிகை சௌந்தர்யா மரணம் இயற்கையானது இல்லை என்றும், அவரை கொலை செய்திருக்கிறார்கள் என்றும் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

ஒருகாலத்தில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சௌந்தர்யா. விஜயகாந்துடன் அவர் நடித்த படங்களுக்கு இன்றும் ரசிகர்களின் வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றன. படையப்பா படத்தில் இவரின் கதாப்பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. 90களில் மிகவும் கொடிகட்டி பறந்த இவர், கன்னட சினிமா மூலம் அறிமுகமானார். பின் தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற  மொழிகளில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் திரையுலகில் உச்சத்தை அடைந்தார்.

பின் நாட்கள் ஆக ஆக, சொந்தர்யாவின் மவுஸ் குறைந்தது. இதனால், அவர் சினிமாவை விட்டு அரசியலில் இறங்கினார். 2004 பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக, ஒருமுறை பெங்களூருவிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டது. அதில் அவரும் அவரின் சகோதரரும் இறந்துவிட்டனர்.

இத்தனை வருடங்களுக்கு பின்னர், அவரின் இறப்பிற்கு மோகன் பாபுதான் காரணம் என்று சொல்லி ஒருவர் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிபாபு என்பவர்தான் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

சௌந்தர்யா சினிமாவில் இருந்தபோது,  ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் ஆறு ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகை கட்டி இருந்தார்.

இதன் சந்தை மதிப்பு இப்போது 100 கோடியாகும். அப்போது அந்த மாளிகையை தான் வாங்கிக் கொள்வதாக மோகன் பாபு கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் மறுத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு, நன்கு திட்டமிட்டு சௌந்தர்யாவையும், அவரது சகோதரர் அமர்நாத்தையும் கொலை செய்ததாக சிட்டிபாபு குற்றம் சாட்டினார்.

சௌந்தர்யா இறந்த பிறகு, அந்த மாளிகையை குறைந்த விலைக்கு மோகன்பாபு வாங்கியதாகவும். அதில்தான் தற்போது அவர் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தற்போது மஞ்சு டவுனில் உள்ள அந்த விருந்தினர் மாளிகையை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கோபத்தை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தலாமே பாஸ்!
Soundarya

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com