கோபத்தை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தலாமே பாஸ்!

Anger
Anger
Published on

கோபத்தை அடக்குவதும், ஆத்திரத்தில் வெடிப்பதும் தனிப்பட்ட நிலையிலோ அல்லது வெளி இடங்களிலோ பாதிப்பை உண்டு செய்யலாம். இது உங்கள் நல்வாழ்வையும் பாதிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உடல் உணர்ச்சி ரீதியான எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்.

ஆனால் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். 2010 ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் படி கோபத்தை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது. இப்போது உங்கள் கோபத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.

கோபம் வரும் போது சுவாசத்தை சரியாக கவனிக்கமாட்டீர்கள். இந்த ஆழமற்ற பதட்டத்துடன் கூடிய சுவாசம் உங்களை இன்னும் ஆக்ரோஷமாக காட்டும். இதை எதிர்த்து போராட சுவாசத்தை கட்டுப்படுத்துங்கள் ஆழ்ந்து வயிற்றில் இருந்து சுவாசம் பெறுங்கள். இது உங்களை அமைதிப்படுத்தும். கோபம் அதிகமாக இருக்கும் போது உட்கார்ந்துகொண்டு வசதியாக இருங்கள். பிறகு மூக்கு வழியாக சுவாசியுங்கள். வயிறு மேல் எழும்பி வருவதை கவனியுங்கள். நாள் ஒன்றுக்கு 3 முறை 5முதல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் கோபமில்லாத மனிதர்களாக மாறி வரலாம்.

கோப உணர்வு அதிகமாக இருக்கும் போது மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுவது மனதை அமைதிப்படுத்த உதவும். கொதிக்கும் மனநிலையில் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்த படத்தை வரைய முயற்சிப்பது நல்லது. உங்களுக்கு படம் வரைய தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம். சிறு குழந்தைகள் போன்று மிக்கி மவுஸ் கூட வரையலாம். கவனம் இதில் இருக்கும் போது கோப சிதறல்கள் இருக்காது.

ஆறுதல் தரும் மந்திரத்தை சொல்வதன் மூலம் அமைதியான சொற்றொடரை திரும்ப சொல்வது கோபம் விரக்தி போன்ற கடினமான உணர்ச்சிகளை எளிதாக்குகிறது. மந்திரம் என்றால் பெரிய மாயாஜாலம் அல்ல. ஆல் இஸ் வெல் என்பது போன்று எல்லாம் சரியாகிவிடும் என்று மெதுவாக அழுத்தமாக சொல்வதன் மூலம் கோபம் பறந்துபோகலாம். ​சில நேரங்களில் அசையாமல் உட்காந்திருப்பதன் மூலம் உங்கள் கோபம் இன்னும் அதிக கவலையை உண்டு செய்யலாம். இந்த நேரத்தில் யோகா செய்வதன் மூலம் உடலை தளர்த்துவதன் மூலம் தசைகளில் பதற்றம் உண்டாகலாம். குறைந்தது சிறிய நடைபயிற்சி அல்லது சிறிது நடனமாட முயற்சி செய்வது கோபத்தை குறைக்கும்.

​கோபமான வெடிப்புகள் உங்களுக்கு எந்த உதவியும் செய்யாது. ஆனால் கோபத்துக்கு பிறகு உங்களுக்கு நெருக்கமான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தகூடாது என்று சொல்ல முடியாது. உங்கள் கோபத்தில் சிலவற்றை வெளிப்படுத்த செய்யலாம். இதனால் உள்ளே கோபம் தேங்குவதை தடுக்கிறது. கோபத்தில் நீங்கள் செய்ய வேண்டியது அமைதியாக இருப்பது. எதையும் பேசுவதற்கு முன்பு சிந்தித்து பேசுவது என்பது தான். இதை சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அதை செயலாற்றுவது கடினமாக இருக்கும். அதனால் வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களிடமும் அதையே கூறுங்கள்.

இதையும் படியுங்கள்:
கோபம் அது ஒரு சாபம்!
Anger

கோபத்தில் அமைதியில்லாமல் வைத்திருக்க செய்யும் நிகழ்வுகள் மோசமானவை. இது ஆக்ரோஷமாக வைக்கும். குழப்பமான விஷயங்கள் உங்களை மேலும் வருத்தப்பட வைக்கலாம். ஆனால் உங்களால் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றுங்கள். இதன் மூலம் கோபம் வராமல் தடுக்கலாம். அதே நேரம் மாற்ற முடியாத விஷயங்களாக இருந்தால் அது குறித்து கவலைப்படாமல் யதார்த்தமாக இருங்கள். ​மன்னிப்பு என்பது சக்தி வாய்ந்த கருவி. கோபம் மற்றும் பிற எதிர்மறை உணர்வுகள் நேர்மறை உணர்வுகளை வெளியேற்ற செய்யலாம். இதனால் மனதினுள் அழுத்தமாக வெறுப்பு உணர்வு அதிகரிக்கலாம். கோபப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றி சிந்திப்பதை சில மணி நேரம் தள்ளிபோடுங்கள். இது பெரிய விரிசலை உண்டு செய்யாது என்பதோடு தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்கவும் உதவும்.

அத்தனை முயற்சிகள் செய்த பிறகும் கோபத்தை கட்டுப்படுத்துவது சில சமயங்களில் சவாலாக இருக்கும். கோபம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால் இதனால் உங்களை சுற்றியிருப்பவர்கள் காயத்தை கொண்டிருப்பதாக நினைத்தால் கோபத்தை கட்டுப்படுத்த உளவியல் நிபுணரின் ஆலோசனையை பெற முயற்சியுங்கள்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் கோபக்காரரா? Anger, Danger ஆனால்... அபாயம்! அபாயம்!
Anger

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com