வெள்ளித்திரையில் மீண்டும் மோகன் - ‘கம் பேக்’ கலக்குமா?

Mohan's haraa movie
Mohan's haraa movie

து 1980களின் மத்திய பகுதி. சென்னை புறநகரில்  நடந்த கொலைகளின் சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரை கைது செய்கிறார்கள். அந்த இளைஞரை விசாரிக்கும்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தெரிவிக்கிறார். தனது குடும்பத்தில் உள்ள நபர்களுடன் ஏற்பட்ட  சொத்து தகராறில் அவர்களை வீட்டிலேயே கொன்று புதைத்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார். இதைபோன்று தனக்கு எண்ணம் வருவதற்குக் காரணம், தான் பார்த்த 'நூறாவது நாள்' திரைப்படம் என்றும், இந்தப் படத்தில் கொலை செய்து வீட்டில் புதைக்கும் காட்சியைப் பார்த்துத்தான் தனக்கு உந்துதல் ஏற்பட்டு, இதுபோன்று செய்ததாகவும் குறிப்பிடுகிறார்!

அந்த இளைஞரின் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய ‘நூறாவது நாள்’ படத்தை இயக்கியவர் மணிவண்ணன். அப்படத்தில் கொலைகளைச் செய்யும் வில்லனாக மிரட்டி இருந்தவர் மோகன்.

ல வெற்றிப் படங்களைத் தந்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வருகிறார். 'ஹரா' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Mohan's Haraa movie
Mohan's Haraa movie

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்கள்
சினிமாவை விட்டு ஒதுங்கினால் ரசிகர்களும் அப்படியே அவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். மறந்தும் போய் விடுவார்கள். சிலரை மட்டும்தான் இவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா? என்று எதிபார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்புப் பட்டியலில் ‘டாப் ஆஃப் த லிஸ்ட்’ல் இருப்பவர் மோகன் என்பது நிரூபணமாகி வருகிறது.

ர்நாடக மாநிலம் உடுப்பியை பூர்வீகமாகக் கொண்ட மோகன் ‘கோகிலா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல கன்னட, மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலுமகேந்திரா, தனது நண்பன் மோகனை 1980ஆம் ஆண்டு தான் இயக்கிய ‘மூடுபனி’ என்ற படத்தில் பாஸ்கர் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார்.

Nenjathai Killathe
Nenjathai KillatheImg Credit: Imdb

அதே வருடம் இயக்குநர் மகேந்திரன், தான் இயக்கிய ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் மோகனை ஹீரோவாக்கினார். அதற்கு முந்தைய ஆண்டு ‘உதிரிப்பூக்கள்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தந்து, சிறந்த இயக்குநர் என்ற பெயரை உருவாக்கி வைத்திருந்தார் மகேந்திரன். இந்தப் பெயரை தக்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் மகேந்திரன் இருந்தார் . ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படம் மகேந்திரனுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்படத்தில் நடித்த மோகனும், சுஹாசினியும் பட வெற்றிக்கு முக்கியக் காரணம் 'பருவமே புதிய பாடல் பாடு' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். இந்தப் பாடல் உருவாக்கப்பட்ட விதம், இசை, மோகன், சுஹாசினியின் நடிப்பு இவைகளுக்காக 43 ஆண்டுகள் தாண்டியும் இன்றளவும் ரசிக்கும் பாடலாக உள்ளது .

1980களின் காலம் என்பது சினிமா உலகம் யதார்த்த கதைகளைத் தேடிய காலம். மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற டைரக்டர்கள் யதார்த்த நடுத்தரக் குடும்பக் கதைகளை எடுக்கத் தொடங்கினார்கள். மோகனின் உருவமும், யதார்த்தமான நடிப்பும் இந்த இயக்குநர்கள் இயக்கிய கதைகளுக்கு இயல்பாக பொருந்திப்போனது.

Mohan
Mohan

பிரபலமடைந்த பின்னர் மோகன் பெரிய டைரக்டருடன் மட்டுமே பயணிக்காமல், புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பு தந்தார். ஆர். சுந்தர்ராஜனை ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இயக்குநராக அறிமுகம் செய்தார் மோகன். ‘மௌன ராகம்’ இயக்கியபோது மணி ரத்னம்கூட அத்தனை பிரபலம் அடைந்திருக்கவில்லை. ஸ்கிரிப்ட்டின் மீது நம்பிக்கை வைத்து நடித்தார் மோகன். இன்றளவும் இப்படங்களும் மோகனின் நடிப்பும் பேசப்படுகிறது .     

1980ல் அறிமுகமான மோகன் 12 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடித்தார். நடித்த 108 படங்களில் 85 படங்கள் தமிழ் படங்கள். மோகன் நடித்த படங்கள் வெற்றி பெறுவதற்கு இளையராஜாவின் இசையும், எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களும் மிக முக்கியக் காரணம். இருந்தாலும், பாடல் காட்சிகளில் மோகன் அவர்களின் உதட்டசைவும், எக்ஸ்பிரசனும் இப்பாடல்கள் ‘ஹிட்’டாவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தன. ‘மோகன் அளவிற்குப் பாடல்களுக்கு மிகச் சிறப்பாக லிப் மூவ்மெண்டும், உணர்ச்சியும் தருபவர் வேறு யாரும் இல்லை’ என்று மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்:
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
Mohan's haraa movie

நீண்ட தூர பேருந்து, கார் பயணங்களில் ‘சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்’, ‘நிலவு தூங்கும் நேரம்’ என மோகன் நடித்த பல படங்களின் பாடல்கள் நம் பயணத்தை இனிமை ஆக்குகின்றன. இளையராஜாவின் இசையில் மோகன் நடித்த படங்களின் பாடல்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள் பலரின் மனக்கவலைக்கு மருந்தாக உள்ளன. மோகன் மீதுள்ள அபிமானத்தால் 1980களில் பிறந்த பல ஆண் குழந்தைகளுக்கு மோகன் என்று பெயர் வைத்தார்கள் அன்றைய பெற்றோர்கள்.

‘கிளிஞ்சல்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘உதயகீதம்’, ‘மௌன ராகம்’, ‘தீர்த்த கரையினிலே’, ‘குங்குமச்சிமிழ்’, ‘ரெட்டை வால் குருவி’  போன்ற படங்கள்  மோகன்  நடித்து இன்றும் பேசப்படும் படங்களில் சில. இவரை ‘மைக் மோகன்’ என்று அழைத்தாலும் மைக்குடன் இவர் நடித்த படங்கள் ஐந்துதான்.

1991ஆம் ஆண்டு ‘உருவம்’ என்ற படத்தில் பேயாக நடித்தார் மோகன். இந்த படத்திற்குப் பிறகு மோகன் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. மோகன் உருவம் படத்தில் பேயாக நடித்ததுதான் மோகனின் வீழ்ச்சிக்குக் காரணம் என சென்டிமெண்டாக சொன்னார்கள் பலர். அதன்பிறகு ஓரிரு படங்களில் நடித்தாலும் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

Mohan
Mohan

என்ன ஆனார் மோகன்? ஆட்கொல்லி நோய் வந்து இறந்துவிட்டார் மோகன் என்றெல்லாம் சிலர் வதந்தி பரப்பினார்கள். இதை பொய்யாகும் விதமாக சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாக்கள், 1980களின் கலைஞர்களின் ரீ யூனியன் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு  "ஐ ஆம் ஹியர்" என்றார் மோகன் .

நீண்ட இடைவெளிக்குப் பின்பு மோகனை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். ‘பயணங்கள் முடிவதில்லை’ என்பதை நிரூபிப்பது போன்று ‘ஹரா’ திரைப்படத்தில் ஒரு ‘கம் பேக்’ கொடுத்திருக்கிறார் மோகன்.

Welcome back Mohan sir. We are eagerly awaiting to see you on the silver screen once again

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com