மோகன்லாலின் அரிய சாதனை… திரையுலகமே மாலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்த அந்த சாதனை இதுதான்!
2025-ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகர் மோகன்லாலுக்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. அவர் ஒரே ஆண்டில் தொடர்ந்து மூன்று பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைப் பெற்று கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். மேலும், மத்திய அரசும் அவருக்கு உயரிய தாதாசாகேப் பால்கே விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
மோகன்லால், இந்தியத் திரையுலகில் மிகவும் போற்றப்படும் நடிகர். சுமார் 40 ஆண்டுகள், 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1980-ல் வில்லனாக அறிமுகமாகி, 1986-ல் 'ராஜாவின்டே மகன்' மூலம் 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தைப் பெற்றார். இவரது சினிமாப் பயணத்தின் சிறப்பு, பல வசூல் சாதனைகளைப் படைத்ததுதான்.
மலையாளத் திரையுலகில் ₹1 கோடி முதல் ₹50 கோடி, ₹100 கோடி, ₹200 கோடி வசூல்களை இவரது படங்களே எட்டின. நடிப்புக்காக 5 தேசிய விருதுகளும், இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. அத்துடன், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார். தனது அசாத்திய நடிப்பால் மோகன்லால் இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில், மோகன்லால் கேரள பாக்ஸ் ஆபிஸில் மட்டும் பிரம்மாண்டமாக ₹250 கோடி வசூல் செய்து, எந்தவொரு மலையாள நடிகரும் எட்டாத ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது வெற்றிப் படங்களின் விவரங்கள்:
L2-எம்புரான் (L2-Empuraan): ₹268 கோடி
தொடரும் (Thudarum): ₹235 கோடி
ஹிருதயபூர்வம் (Hridayapoorvam): ₹100 கோடி
மேலும் சோட்டா மும்பை மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ₹3.61 கோடி வசூல் செய்தது.
மலையாளத் திரையுலகில் எந்த ஒரு நடிகரும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை. மோகன்லால் தொடர்ந்து மலையாள சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
அந்தவகையில் உலகளாவிய வசூல் நிலவரப்படி, இந்த நடிகர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ₹550 கோடிக்கும் அதிகமாக மொத்த வசூலைக் குவித்து, ஆண்டு முழுவதும் பெரிய வெற்றிகளை அளித்துள்ளன.1மேலும், இந்த தீபாவளிக்கு அவரது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் 'விருஷபா' (Vrushabha) திரைப்படம் வெளியாக உள்ளது.