யுவன் சங்கர் ராஜாவின் Independent Music Album வெளியீடு!

Yuvan shankar Raja
Yuvan shankar Raja

சினிமாவில் இயக்குனர்களுக்கு இணையானவர்கள் என்றால், அது இசையமைப்பாளர்கள்தான். திரைப்பட பாடல்கள் ஒருபுறம், அதேபோல் இன்டிபென்டன்ட் பாடல்கள் மறுபுறம் என இசை, ரசிகர்களை மாற்றி மாற்றிப் பூர்த்தி செய்து வருகிறது. அந்தவகையில், யுவன் சங்கர் ராஜாவின் ஒரு இன்டிபென்டன்ட் பாடல் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்டிபென்டன்ட் இசையமைப்பாளர்கள் சமீபக்காலமாக பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். ஆகையால், திரைப்பட இசையமைப்பாளர்களும் அவ்வப்போது இன்டிபென்டன்ட் பாடல்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில், கோலிவுட் சினிமாவில் ஒரு முக்கிய இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா ஒரு  இன்டிபென்டன்ட் மியூசிக் வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னரே யுவனின் இந்தப் பாடல் வெளியானது. ஆனால், அப்போது வெளியில் யாருக்குமே தெரியவில்லை. ஏனெனில், அந்த அளவுக்கு ப்ரொமோஷன் எதுவும் செய்யப்படவில்லை.

ஆனால், இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பாடல் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இப்பாடலை யுவனே எழுதி, பாடியிருக்கிறார். அதேபோல், அந்த மியூசிக் விடியோவில் அவரே நடித்திருக்கிறார். முதன்முதலில் 2011ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா, I’ll be there for you என்ற இன்டிபென்டன்ட் பாடலை வெளியிட்டார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகிய இப்பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல் 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு மூன்று ஆல்பம் பாடல்களை வெளியிட்டார். இதுவரை மூன்று இன்டிபென்டன்ட் பாடல்களை வெளியிட்ட யுவன், Money in the bank என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளார். இப்பாடலை அபிஷேக் ரங்கநாதன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
'என் ஹீரோ' என தன் காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா!
Yuvan shankar Raja

இது யுவன் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. ‘வாசல் வந்த பூவிது’ என்று தொடங்கும் இந்தத் தத்துவப் பாடலை வளைகுடா நாட்டில் படமாக்கியுள்ளனர். மேலும், துபாய் பாலை வனத்தில் பாடலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்தப் பாடல் பலரால் பகிரப்பட்டும், லைக்ஸ் செய்யப்பட்டும் வருகிறது. தற்போது வரை இந்தப் பாடல், 1.39 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com