‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ : ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பக்தித் திரைப்படம்; சற்றுமுன் வெளியான அப்டேட்!
Mookuthi amman 2
Mookuthi amman 2 source:twitter
Updated on

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, சினேகா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் ரூ.100 கோடிக்கும் அதிகமான பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று செப்டம்பர் 14 அன்று காலை 10 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மூக்குத்தி அம்மன்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பக்தி மற்றும் கமர்ஷியல் படங்களை வெற்றிகரமாக இயக்கி அனுபவம் வாய்ந்த முன்னணி இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளன.

Mookuthi amman
Mookuthi ammancredits : Swarajya

இப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் அவதாரமெடுத்துள்ளார். அவருடன் ஊர்வசி, சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகி பாபு, துனியா விஜய், ‘கே.ஜி.எஃப்’ புகழ் ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அறிவித்தபடி இன்று (செப்டம்பர் 14) காலை 10 மணிக்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மீக உணர்வும் கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டமாகத் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com