நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சித்தர் சொல்லித் தந்த ஒரு வாழ்க்கைப் பாடத்தை குறித்து வாய்த் திருந்திருக்கிறார். அது என்னவென்று பார்ப்போமா?
தமிழ்த் திரையுலகில், ஒரு நடிகர் தனது தனித்துவமான உடல்மொழி, குரல் வளம் மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எம்.எஸ்.பாஸ்கர். எம்.எஸ். பாஸ்கர், ஒரு நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று குணச்சித்திர வேடங்களில் மிக ஆழமான முத்திரையைப் பதித்து வருகிறார்.
தொடக்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில், குறிப்பாக 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' போன்ற தொடர்களில் தனது நகைச்சுவை திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் அவருக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தன. திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக தனது திறமையை நிரூபித்து, இயக்குநர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
எம்.எஸ்.பாஸ்கர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தனது இயல்பான நடிப்பால் உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டவர். ஒரு தந்தையாக, நண்பராக, வில்லனாக, அல்லது நகைச்சுவை கதாபாத்திரமாக எதுவாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தனது தனிப்பட்ட பாணியைக் கொண்டுவந்து சேர்க்கிறார். 'குருதிப்புனல்' படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடமாகட்டும், 'மொழி' படத்தில் அக்கா மாமாவாகட்டும், அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன.
அவரது குரல் வளம் ஒரு மிகப்பெரிய பலம். டப்பிங் கலைஞராகவும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். சமீப காலமாக, இந்தியத் திரையுலகில், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு அசைக்க முடியாத கலைஞர் என்பதில் சந்தேகமில்லை.
அந்தவகையில் ஒருமுறை சித்தர் தனக்கு இதனை போதித்தார் என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
“ஒரு சித்தர் கிட்ட உக்காந்து பேசிக்கிட்டு இருந்தேன். எனக்கு சித்தர்கள் ஈடுபாடு நெறைய உண்டு. நான் ஒருத்தர் கிட்ட உக்காந்து பேசிட்டு இருந்தேன். அவர்பாட்டுக்கு டீ சாப்டுவாரு, சிகரெட் பிடிப்பாரு. அவர்பாட்டுக்கு உக்காந்து இருப்பாரு. நெனச்சா பேசுவாரு. இல்லன்னா பேசமாட்டாரு.
அவர்கூட இருக்கும்போது ஒரு போன் வந்தது. Date கேட்டாங்க. அப்போ நான் நாளைக்கு நா இல்லன்னு சொல்லிட்டேன். போன் வச்சது அப்றம் அவரு என்கிட்ட என்னன்னு கேட்டாரு. இதுமாதிரி நாளைக்கு ஷூட்க்கு டேட் கேட்டாங்கன்னு சொன்னேன். அதுக்கு நா நாளைக்கு இல்லன்னு சொல்லிட்டேன். அப்ப அவரு கேட்டாரு, “ நாளைக்கு நா இல்லன்னா, அவுங்கக்கிட்ட நீ போய் வொர்க் பண்ண உனக்கு டேட் இல்லையா? இல்ல நீயே இல்லையா? ன்னு கேட்டாரு. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.
மேலும் அவர் சொன்னாரு. உனக்கு நம்பிக்க இருக்குனு சொல்றேன். நம்மள சுத்தி எப்போதும் ஒரு சக்தி இருக்கும். நம்ம சொல்ற சொல்லுக்கு அது அப்படியே ஆகட்டும்ன்னு சொல்லும். அதனால எப்பவுமே நேர்மறையா பேசு.
நாளைக்கு எனக்கு ஷூட்டிங் இருக்கு. வேற வேலை இருக்கு. நாளை மறுநாள் வரேன்னு சொல்லு அப்டினாரு.”
இது நான் என் வாழ்க்கையில கத்துக்குட்ட பெரிய விஷயம்.