மாலகைட் (GOD STONE) மேஜிக்!

ஆழ்ந்த பச்சை வர்ணத்தில் சுருள் சுருளான வட்டங்களுடன் இருக்கும் இந்த உபரத்தினக் கல், அணிபவரின் வாழ்வில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்துமாம்.
malachite stone and finger ring
malachite stone
Published on

சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு மாற்றுவழி மருத்துவம் இருக்கிறது. மாலகைட் என்ற உபரத்தினத்தை அணிவது தான் அது.

கோளாறு படிப்படியாக நீங்க உடனே வழி பிறக்கும். மூட்டு வீக்கம், ஆஸ்துமா போன்ற நோய்களையும் நீக்கும் ஆற்றல் படைத்தது மாலகைட்.

ஆழ்ந்த பச்சை வர்ணத்தில் சுருள் சுருளான வட்டங்களுடன் இருக்கும் இந்த உபரத்தினக் கல், அணிபவரின் வாழ்வில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாளை என்ன நடக்குமோ என்று கதிகலங்கிப் பயப்படுவர்களுக்கான அதிசயக் கல் இது. அணிந்தவுடன் உள்ளும் புறமும் மாற்றத்தை ஏற்படுத்தும்!

இது எதிர்மறை ஆற்றலை நீக்கி உடனடியாகப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். நம்பிக்கையை உருவாக்கும். செல்வத்தையும் வளத்தையும் ஈர்க்கும்.

மாலகைட் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதன் பொருள் பச்சை என்பதாகும். மயில்தோகையில் பார்க்கும் பச்சை நிறத்தை ஒத்திருக்கும். இது மயிலின் கூரிய கண்களையும் ஒத்திருக்கும்,

பழங்கால எகிப்தியர்கள் இதை ‘காட் ஸ்டோன்’ – கடவுளின் ரத்தினம் – GOD STONE- என்றே அழைத்தனர்.

அரிதாகக் கிடைப்பது என்பதால் இதன் விலையும் சற்று அதிகம் தான்.

ஆன்மீக சாதகர்களுக்கு இது ஒரு விசேஷமான ரத்தினக் கல். அனாஹத என்ற இதய சக்கரத்தையும் (HEAR CHAKRA) விசுத்தி சக்கரத்தையும் (THROAT CHAKRA) இது தூண்டிவிட்டு ஆன்மீக வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகப்பெரிய ரத்தினக் கல் கண்டுபிடிப்பு… எங்கு தெரியுமா?
malachite stone and finger ring

சீன வாஸ்து கலையான பெங்சுயி படி இது உடல் மற்றும் உள்ளரீதியாக பிராண சக்தி எனப்படும் ‘சி’ யை (CHI) தரும்.

மாலகைட் மோதிரம், மாலகைட் கங்கணம், மார்பில் சங்கிலியில் பதித்துக் கொள்வது போன்று இப்படி எப்படி வேண்டுமானாலும் இதை அணிந்து கொள்ளலாம்.

அதிகமாகப் பயணப்படுபவர்கள் அதனால் பாதிக்கப்படுபவர்கள் என்றால் அவர்கள் இதை அணிந்து நிவாரணம் பெறலாம்.

ஒருமுனைப்படுத்தும் சக்தி இல்லாதவர்கள் தங்கள் மேஜையில் இதை வைத்துக் கொள்ளலாம். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கவசம் போன்ற இதை அணிந்தால் நினைக்கின்ற நல்ல விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பதே இதைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com