அடுத்து ஆண்டு பிரபலங்களின் படங்களில் பிஸியாகும் அனிருத்!

அனிருத்
அனிருத்

னிருத் அடுத்த ஆண்டு வெளியாகும் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன், ப்ரதீப் ரங்கநாதன், கவின், ஜூனியர் என்டிஆர், ஆல்லு அர்ஜூன் போன்ற பிரபலமான ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமா துறையில் அறிமுகமானார். இவரின் பாடல்கள் இளைஞர்களுக்கு ஒரு வைப் மெட்டிரியலாகவே இருந்து வருகிறது. அனிருத் 2010 ஆம் ஆண்டு முதல் ஜவான் படம் வரை கிட்டத்தட்ட 30 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் முதலில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வந்தார். பின்னர் இவரின் திறமை விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், ரஜினி, அஜித் என்று முக்கிய நடிகர்களின் படங்கள் வரை அழைத்துச்சென்றது. ஊக்கப்பாடல்கள், காதல் பாடல்கள், ஹீரோ என்ட்ரி பாடல்கள் என அனைத்திலும் அனிருத் கைத்தேர்ந்தவர் என்றே கூற வேண்டும்.

சமீபத்தில் வெளியான ‘ஐயோடா’, ‘ஜெயிலர்’ தீம் பாடல், ‘போர்கண்ட சிங்கம்’ ஆகிய பாடல்கள் இளைஞர்களின் ப்ளே லிஸ்ட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்றே கூற வேண்டும். அந்தவகையில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார். படம் ஒன்றுக்கு ரூ.8 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

அடுத்த ஆண்டு அனிருத்திற்கு மிகவும் பிஸியான ஆண்டாகத்தான் இருக்கும். ஏனெனில் இப்போதே அவர் இசையமைக்கும் அடுத்த படங்களின் அப்டேட் வெளியானது. லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் கமல ஹாசன் நடிக்கு இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள், அஜித்குமாரின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரின் 23 படம், ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன், கவின் நடிக்கவிருக்கும் அவரின் 4 வது படம், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படம், விஜய் தேவரகொண்டாவின் 12 வது படம், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படம், விக்னேஷ் சிவனின் துணை இயக்குனர் ஆகாஷ் இயக்கி அதர்வா நடிக்கும் படம் ஆகிய படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.

அடுத்த ஆண்டு நிச்சயம் அனிருத் ஆண்டு என்றுதான் கூற வேண்டும். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் இரட்டை சகோதரர்களான அன்பரிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இணைந்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com