Akhil akkineni wedding
Akhil akkineni wedding

காதலியை கரம்பிடித்தார் நாக அர்ஜுனா இளைய மகன் அகில் அக்கினேனி!

Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகனும், இளம் நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டநாள் காதலியான ஜைனப் ரவ்ட்ஜியை இன்று (ஜூன் 6) திருமணம் செய்துகொண்டார். மிகவும் எளிமையாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழவும் இந்தத் திருமணம் நடைபெற்றது.

நாகார்ஜுனாவின் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள புதிய இல்லத்தில் இந்தத் திருமணம் நிகழ்ந்துள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களான சிரஞ்சீவி, ராம்சரண், வெங்கடேஷ் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் நாகார்ஜுனா குடும்பத்தால் வெளியிடப்படவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களாக அகில் மற்றும் ஜைனப் காதலித்து வந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுல்பி ராவ்ட்ஜியின் மகளான ஜைனப், பிரபல ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
நூறாயிரம் புள்ளிகள் அமைத்து போடப்படும் 'அந்தாதி கோலம்' தெரியுமா ?
Akhil akkineni wedding

நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில், தற்போது அகிலின் திருமணம் அக்கினேனி குடும்பத்தில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. வரும் ஜூன் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கடேஷ், இயக்குனர் பிரசாந்த் நீல், நடிகர் ஷர்வானந்த், இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா, இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா ஆகியோரும் இதில் கலந்துக்கொண்டனர்.

அகில் மற்றும் ஜைனப் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு, புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com