நாக சைதன்யாவிற்கு இன்று நிச்சயதார்த்தம்… வெளியான திடீர் தகவல்!

Naga chaitanya with shobita
Naga chaitanya with shobita
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நாகார்ஜுன் மற்றும் அமலா ஆகியோரின் மூத்த மகனான நாக சைதன்யாவிற்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

தெலுங்கில் பல படங்கள் நடித்து வந்த நாக சைதன்யா இறுதியாக தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்தார். இப்போது சாய் பல்லவியுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு மீனவனின் உண்மை கதை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே இவர் கடந்த 2017ம் ஆண்டு சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு உறவை முறித்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டனர்.  இவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்தவர். தொடர்ச்சியாக  இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆனால், இருவரும் அவர்கள் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் இன்று (ஆகஸ்ட் 8) மாலை நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினத்தில்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் சமந்தாவிடம் நாக சைதன்யா தனது காதலை சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்டார் படமும் சியான் விக்ரமும்…. அது கதை, இது நிஜம்!
Naga chaitanya with shobita

இதனையடுத்து இந்தாண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்று தெரியவருகிறது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றிய அறிவிப்பு ஒரே நாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில்தான், பல காலங்களுக்கு பிறகு சமந்தாவின் சிட்டாடல் என்ற சீரிஸ் வெளிவரவுள்ளது. இந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷன்களில் சமந்தா கலந்துக்கொண்டு வருகிறார். தனது சொந்த காரணங்களால் சினிமாவை விட்டு விலகியிருந்த சமந்தா தற்போது, மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்து, கடந்த கால வாழ்க்கையை மறந்து வருகிறார். இப்போது இந்த செய்தி, சமந்தா ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

logo
Kalki Online
kalkionline.com