புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் நானா பட்டேகர் காலமானார்: பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி!

கோவாவில் காலமானார் பிரபல நடிகர் நானா பட்டேகர்.
Kala film actor
Nana Patekar
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

பாலிவுட் மற்றும் மராத்தி சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகரான நானா பட்டேகர் இன்று அதிகாலை தனது 75வது வயதில் காலமானார். இந்தியாவில் மிகவும் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகர்களின் பட்டியலில் நானா பட்டேகருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிகச் சிறப்பான நடிப்பினால் பாலிவுட் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க ஏராளமான ரசிகர்களை பெற்றவர். 1951 ஆம் ஆண்டு விஸ்வநாத் பட்டேகர் என்ற இயற்பெயர் கொண்ட நானா பிறந்தார்.

1978 ஆம் ஆண்டு 'கமன்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மராட்டிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வெளியான 'பரிந்தா' திரைப்படம் நானா பட்டேகர் சிறந்த நடிகர் என்று உலகிற்கு காட்டியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தனது முதல் தேசிய விருதினை வென்றார். அதன் பிறகு ஷாருக்கானுடன் இணைந்து நடித்த 'ராஜு பன் கயா ஜென்டில்மேன்' திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிகராக நானா பட்டேகர் வலம் வரத் தொடங்கினார். 'கிரந்தி வீர்' மற்றும் 'அக்னி சாட்சி' திரைப்படங்கள் அவருக்கு மேலும் இரண்டு தேசிய விருதுகளை பெற்று தந்தது. இதன் மூலம் பாலிவுட் சினிமா உலகில் அதிக தேசிய விருதுகள் பெற்ற நடிகர்களில் முன்னிலையில் இருந்தார். ஷக்தி, அபகரன், டாக்சி நம்பர் 9211, வெல்கம் , ராஜ்நீதி, பூத் , அப் தக் சப்பன், பிளஃப்மாஸ்டர் , பிர் ஹேரா பேரி போன்ற திரைப்படங்களில் நானாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தேசிய விருதுகள் மட்டுமல்லாமல் , மராட்டிய மாநில விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் , ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் உள்ளிட்ட பலவற்றையும் நானா பட்டேகர் பெற்றுள்ளார். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் , சிறந்த வில்லன் ஆகிய பிரிவுகளில் அவர் விருதுகளை வென்று உள்ளார். மேலும் இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதையும் அவர் பெற்று இருந்தார்.பாலிவுட், மராட்டி, ஆகிய மொழிகளை தாண்டி தமிழ் சினிமாவிலும் 'பொம்மலாட்டம்' மற்றும் 'காலா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நானா பட்டேகர் நடித்துள்ளார்.

Nana Patekar
Nana Patekar in Shakthi filmImage credit: youtube

ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த சமூக சேவகாரராகவும் நானா பட்டேகர் இருந்துள்ளார். அவர் திரைப்படங்களில் பெரும் வருமானங்களில் பெரும்பாலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்து வந்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட அந்த மாநில மக்களுக்கு அவ்வப்போது நிவாரணமும் அளித்துள்ளார். பீகாரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட போது, 'அனுபூதி' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மக்களுக்கு உதவ 'நாம்' என்ற அறக்கட்டளையும் அவர் வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில், கோவாவில் உள்ள தனது வீட்டில் நானா பட்டேகர் காலமானார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானா பட்டேகரின் மறைவு பாலிவுட்டில் ஒரு மிகச்சிறந்த நடிகரின் சகாப்தத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING : பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்..!
Kala film actor
logo
Kalki Online
kalkionline.com