‘கடைசி விவசாயி’ படத்தின் தேசிய விருது பதக்கம் திருட்டு! அதிர்ச்சியில் உசிலம்பட்டி!

Manikandan and Vijay Sethubathi
Manikandan and Vijay Sethubathi

கடைசி விவசாயி படத்தின் இயக்குனரான மணிகண்டன் வீட்டில் திருடர்கள் புகுந்ததில், அத்திரைப்படத்திற்குக் கொடுக்கப்பட்ட தேசிய விருதின் பதக்கம், ஒரு லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் சொந்த ஊரான உசிலம்பட்டியே அதிர்ச்சியில் உள்ளது.

2022ம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படம் ஒரு ஆகச்சிறந்த படைப்பாக தமிழ் சினிமா உலகில் கருதப்படுகிறது. மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடித்தனர். மணிகண்டனின் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி என அனைத்து படங்களுமே பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களாகவே இருக்கும். இவர் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றார்.

இயக்குனர் மணிகண்டன் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவை உசிலம்பட்டி தேனி சாலையில் உள்ளன. மணிகண்டன் தன் அடுத்த படத்திற்காக குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இதனால் உசிலம்பட்டி வீட்டில் உள்ள நாய்க்கு உணவளிக்க ட்ரைவர்கள் ஜெய்க்குமார் மற்றும் நரேஷ் குமார் ஆகியோர் வழக்கமாக வீட்டிற்கு வருவார்கள். அந்தவகையில் நேற்று முன்தினம் நாய்க்கு உணவளிக்க 4 மணியளவில் நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதன்பின்னர் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர்கள் விரைவாக வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அதேபோல் கலைந்திருந்த வீட்டை சோதித்து பார்க்கையில் 5 பவுன் நகை, கடைசி விவசாயி படத்தின் தேசிய வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையும் படியுங்கள்:
மிரட்டும் சைரன் பட ட்ரைலர்.. எப்படி இருக்கு?
Manikandan and Vijay Sethubathi

உடனே இதுதொடர்பாக சென்னையில் இருக்கும் இயக்குனர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்த பின்னரே வேறு ஏதும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும்.

இந்நிலையில் போலீசார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து டிஎஸ்பி நல்லு தலைமையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com