தேசிய திரைப்பட விருதுகள் 2022... யாருக்கு என்ன விருது தெரியுமா?

National Film Awards 2022
National Film Awards 2022
Published on

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக 2019ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 70வது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அதிலும் இந்த ஆறு விருதுகளையும் இரண்டு தமிழ் படங்கள் தான் வென்றுள்ளன. அதில் ஒன்று மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1. அப்படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மற்றொன்று தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இதில் மேலும் சில தமிழ் படங்களுக்கும் விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் ஒன்று தான் கமல்ஹாசனின விக்ரம் திரைப்படம். இப்படத்திற்கு சிறந்த ஸ்டண்ட் மாஸ்டருக்கான விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விருது கேஜிஎப் 2 படத்துக்கு வழங்கப்பட்டது. இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு படங்களுக்குமே ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியது அன்பறிவு தான்.

இதையும் படியுங்கள்:
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் முன்னோடி - தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஆபாவாணன்!
National Film Awards 2022
  • சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1

  • சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2

  • சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளக்கா

  • சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எஃப் 2

  • சிறந்த இந்தி திரைப்படம் - குல்மோஹர்

  • சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

  • சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

  • சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா

  • சிறந்த துணை நடிகை - நீனா குப்தா

  • சிறந்த துணை நடிகர் - பவன் மல்ஹோத்ரா

  • சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (கே.ஜி.எஃப் 2)

  • சிறந்த நடன இயக்குநர் - ஜானி, சதீஷ் (‘மேகம் கருக்காதா - திருச்சிற்றம்பலம்”)

  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1), ப்ரிதம் (பிரம்மாஸ்திரா)

  • சிறந்த படத்தொகுப்பு - மகேஷ் புவனேந்த் (ஆட்டம்)

  • சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)

  • சிறந்த திரைக்கதை - ஆட்டம் (மலையாளம்)

  • சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)

  • சிறந்த பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ ( ‘சாயும் வெயில்’ - சவுதி வெள்ளக்கா)

  • சிறந்த பாடகர் - அர்ஜித் சிங் ( ‘கேசரியா’ - பிரம்மாஸ்திரா)

  • சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீ பத் (மல்லிகபுரம்)

  • சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா

  • சிறந்த திரைப்படம் - ஆட்டம் (மலையாளம்)

  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா (கன்னடம்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com