
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மையப்படுத்தி வெளியாகும் அன்னபூரணி திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கேரளாவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் கதாநாயகிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் திரைப்படங்களை பார்த்து கவனமாக தேர்வு செய்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் நயன்தாரா தற்போது அறிமுகம் ஆகிவிட்டார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் 9 ஸ்கின் என்ற நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார் நயன்தாரா.
இந்த நிலையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படத்திற்கு அன்னபூரணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற நான்கு மொழிகளில் படம் வெளியாகிறது. ஜி ஸ்டூடியோஸ், டிரைடெண்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டுடியோ ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படம் கதாநாயகியான நயன்தாராவை மையப்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் தொடங்கப்படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அன்னபூரணி படத்திற்கான கிளிம்ப்ஸ் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.