திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, எல்லாமே உங்களால் தான் வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன் தாரா. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், கடைசியாக ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். பான் இந்தியா படமான இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் அன்ன்ப்பூரணி படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிக்கிடைக்கவில்லை என்றாலும் பெயரளவில் பிரபலமானது.
சினிமா மட்டுமில்லாமல் தனியே தொழில் துறையிலும் கலக்கி வரும் நயன்தாரா, தன் பெயரில் நிறுவனங்களை தொடங்கி அதில் முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில் திரையுலகில் 20 ஆண்டுகளை கடந்துள்ள நயன்தாரா, எல்லாமே தனது ரசிகர்களால் தான் வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், ”நான் கடந்த 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் தான் காரணம். என்னுடைய கெரியரில் நான் சோர்ந்து விழும்போது எல்லாம், மீண்டும் எழுந்து வர எனது இதயத்துடிப்பாக ரசிகர்களாகிய நீங்கள் உள்ளனர்.
நீங்கள் இல்லை என்றால் எனது இந்த பயணம் முழுமை அடைந்து இருக்காது. எனக்கு அருக்கிலும், தூரத்திலும் இருக்கும் ரசிகர்களாகிய நீங்கள் எப்பொழுதும் எனது ஸ்பெஷல் தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடுவதற்கு நீங்கள் தான் காரணம்” என கூறியுள்ளார்.