

தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும் , தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா , தொடர்ச்சியாக தோல்வியில் துவண்டு வருகிறார். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்திற்குப் பிறகு, அவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை பெறவில்லை.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஆர்ஜே. பாலாஜி இயக்கத்தில் 2020 ஆண்டு நயன்தாரா நடித்திருந்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படமே , தமிழ் சினிமாவில் அவர் நடித்திருந்த கடைசி வெற்றி திரைப்படம் ஆகும். ஒரு காலத்தில் நயன்தாராவுடன் நடித்தால் திரைப்படம் வெற்றியாகும் என்ற நிலை இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ரஜினி, விஜய், அஜித் , சூர்யா , விஜய் சேதுபதி, சரத் குமார் , ஆர்யா , ரவி மோகன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி திரைப்படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும் நயன்தாரா இருக்கிறார். மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அவர் மிகவும் பிரபலமான நடிகையாகவே இருந்து வருகிறார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர் இணைந்து நடித்த 'ஜவான்' திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடித்து சுந்தர்.சி இயக்கிய 'மூக்குத்தி அம்மன் பார்ட் 2 ' பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த இந்த திரைப்படம் , மிகவும் பிரம்மாண்டமான காவியமான 'ராமாயணம் ' மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான 'சீன்' திரைப்படத்தின் முன்னால் எடுபடாமல் போனது.
பெரிய பட்ஜெட் திரைப்படமான இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்து பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடையவில்லை. அதே நேரம் ராமாயணம் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு , தமிழகத்திலும் கிடைக்க, சீன் திரைப்படத்துடன் போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் , ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய, யாஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக் ' திரைப்படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அந்த திரைப்படம் மிகக் கடுமையாக பாதித்திருந்தது. அந்த திரைப்படத்தை பெரிதும் நம்பி இருந்த நயன்தாராவிற்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதற்கு முன்னர் இதற்கு முன்னர் மலையாளத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால் மம்முட்டியுடன் நயன்தாராவும் இணைந்து நடித்த 'பேட்ரியாட் ' திரைப்படமும் வசூலில் பெரிதாக சாதிக்க வில்லை. தற்போது நயன்தாரா தமிழில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தருமன்' திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். அத்துடன் பாலிவுட்டில் சல்மான் கானுடன் பெயர் சூட்டப்படாத திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களையும் அவர் மலை போல் நம்பி உள்ளார். ரஜினி நயன்தாரா ரசிகர்களுக்கு பிடித்த கூட்டணியாக இருந்தாலும் , இதற்கு முன்னர் இவர்கள் இணைந்து நடித்த 'அண்ணாத்தே' மற்றும் 'தர்பார்' திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சொல்லிக் கொள்ளும் படி பெரிய வசூலை குவிக்கவில்லை. இவர்கள் இணைந்த 'சந்திரமுகி ' திரைப்படம் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றது.