கவினுடன் இணையும் நயன்தாரா - ரசிகர்கள் குஷி!

Nayanthara Kavin
Nayanthara Kavin
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரைக்கு வரக் காத்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது வளர்ந்து வரும் நடிகரான கவினுடன் நயன்தாரா இணைந்து நடிக்கப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

தமிழில் டாடா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமான நடிகராக இருப்பவர் கவின். இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஸ்டார் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஓரளவு இலாபத்தைப் பெற்றுத் தந்தது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ப்ளடி பெக்கர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நயன்தாராவுடன் இணைந்து கவின் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இவர்கள் இருவரும் நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, இப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் மற்றும் மாஸ்டர் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய பாடலாசிரியர் விஷ்ணு இடவன் இப்படத்தை இயக்குகிறார். இருப்பினும் படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

கவின், நயன்தாரா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கிடைக்கும் பட வாய்ப்புகளில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வரும் கவினுக்கு, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது என்பது பெரிய விஷயமாகும்.

நயன்தாராவின் நடிப்பில் இந்த ஆண்டு எந்தத் திரைப்படமும் திரைக்கு வராத நிலையில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் மற்றும் டியர் ஸ்டூடண்ட்ஸ் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெள்ளித் திரைக்கு வர வரிசையில் காத்து நிற்கின்றன.

இதையும் படியுங்கள்:
பரோட்டா சூரி நடித்த முதல் படம் எது தெரியுமா?
Nayanthara Kavin

விக்னேஷ் சிவனை நயன்தாரா மணந்த பிறகு, திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இருப்பினும் நல்ல கதையம்சம் கொண்ட படத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா, கவின் உடன் நடிக்க ஒப்புக் கொண்டார் எனில், படத்தின் கதை சிறப்பாகத் தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.