நயன்தாரா செய்த செயல்… மீனா கொடுத்த பதிலடி… !

meena and Nayanthara
meena and Nayanthara
Published on

சுந்தர் சி படத்தின் பூஜை நிகழ்ச்சியில், நயன்தாரா செய்த ஒரு செயலுக்காக மீனா பதிலடி கொடுத்து ஒரு ஸ்டோரி போட்டிருக்கிறார். அது அவருக்குதான் போட்டிருக்கிறார் என்று நேராக சொல்லிவிட முடியாது. ஆனால், கண்டன்ட் பார்த்தால் கூறிவிடலாம்.

சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒருமூச்சு மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து அம்மன் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். அதன்பின்னர் நீண்டக் காலம் சாமி படங்கள் வராமல் இருந்தன. அப்படி வந்தாலும் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை.

அந்தவகையில் மூக்குத்தி அம்மன் படத்தின்மூலம் மீண்டும் ஒரு அம்மன் படம் கம்பேக் கொடுத்தது அனைவரையும் ரசிக்க செய்தது. குறிப்பாக இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஒடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த பேச்சு எழுந்தது. முதலில் இதன் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி என்றும், நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால், அந்த குழு அப்படியே ஒதுங்கிவிட்டது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி எடுக்கவுள்ளாராம். நயன்தாராவே மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் என்பது உறுதியானது. பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் பூஜையில் மீனா, குஷ்பு ஆகியோர் கலந்துக்கொண்டனர். குஷ்பு மீனா இருவரும் ஒன்றாக நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது நயன்தாரா குஷ்புவை மட்டும் பார்த்து பேசிவிட்டு, மீனாவை பார்த்து சிரிக்க கூட இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஏனெனில், படத்தின் பூஜை லைவ் செய்யப்பட்டது.

இதனால், சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.

 இது நயன்தாராவின் திமிரு என்று சிலரும், நயன்தாரா பேசியிருப்பார், நமக்குதான் தெரியவில்லை என்று சிலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி கதை போக, மீனா ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதைப் பாருங்களேன்.

மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஒரு சிங்கம், ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்பதை பற்றி கவலைப்படாது” என்றும் “உங்களது நல்ல உள்ளத்தை மட்டும் எண்ணி பெருமை கொள்ளுங்கள். அனைவரிடமும் இந்த பண்பு இருக்காது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது நிச்சயம் நயன்தாராவுக்காகதான் இருக்கும் என்றும் கருத்துக்கள் வருகின்றன.

இதையும் படியுங்கள்:
குறைந்த வட்டியில் கடன் வாங்க வங்கியை விட இதுதான் பெஸ்ட்!
meena and Nayanthara

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com