

ஜென் ஸ்டுடியோ தயாரிப்பில் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நீ Forever. IT துறையில் பணியாற்றும் அஜய் (சுதர்ஷன் கோவிந்த்) காதலுக்குக்கா நீ Forever என்ற ஒரு செயலியை உருவாக்க முயற்சி செய்கிறார். மதி (அர்ச்சனா ரவி) எனும் இளம் பெண் சினிமா டைரக்டராக இருக்கிறார். ஒரு அழகான காதல் படத்தை இயக்க திட்டமிடுகிறார். இந்த இருவரும் தங்கள் ப்ராஜெக்ட் சரியாக வர ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகிறார்கள். ப்ராஜெக்ட் காக தொடங்கும் காதல் மெல்ல மெல்ல உண்மை காதலாக மாறுகிறது. அஜய்யின் தாத்தா இந்த காதலை ஏற்க மறுக்கிறார். ப்ராஜெக்ட் காதல் வெற்றி பெற்றதா என்று சொல்கிறது நீ Forever.
படத்தின் முதல் பதினைந்து நிமிடத்தில் இதுதான் கதை, கதை மாந்தார்கள் பின் புலம் என்று புரிய வைத்து விடுவது நல்ல முயற்சி. காதலர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது, இருவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அன்புக்காக ஏங்குவது போன்ற அம்சங்கள் புதிது. ராஜா பாட்டாசாரியாவின் ஒளிப்பதிவு, நாகர்ஜுன் எடிட்டங், அஸ்வின் ஹேமநாத் இசை இந்த மூன்றும் சேர்ந்து காதலை ஒரு கவிதை போல் தருகிறது.
மதியாக நடிக்கும் அர்ச்சனா ரவி சிறு வயதில் இருந்து அன்பிற்கு ஏங்குவதை மனதில் வைத்து கொண்டு வெளியில் காட்டி கொள்ளாமல் துள்ளலுடன், காதலுடன் நடித்து சபாஷ் போட வைக்கிறார். மாறுபட்ட கதையில் வரும் இளம் டைரக்டர்கள் அர்ச்சனா ரவியை தைரியமாக அணுகலாம். ஹீரோ சுதர்சன் கோவிந்த் நன்றாக நடித்திருந்தாலும் படம் முழுவதும் சோகமான முகத்துடன் வருவதை தவிர்திருக்கலாம். அம்மாவாக வரும் வித்யாவின் நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது.
படத்தில் உள்ள சில குறைகள் - படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம். தாத்தாவாக நடிக்கும் Y.G.மகேந்திரனின் நடிப்பு நன்றாக இருந்தாலும், பொள்ளாச்சி கொங்கு தமிழில் பேசுவது Y.G.க்கு செட் ஆக வில்லை. இருந்தாலும் இளைய தலைமுறையினரின் விருப்பங்கள், தொழில்நுட்ப அறிவு இவற்றை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதை சொல்ல முயற்சி செய்ததற்கு டைரக்டரை பாராட்டலாம்.
'நீ Forever - லவ் Forever'