சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடிக்கும் தண்டேல் படத்தை நெட் ஃப்லிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளன. மேலும் நாக சைதன்யாவின் கெர்ரியரிலேயே இந்தப்படம் தான் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தண்டேல் படத்தின் பூஜை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. கார்த்திகேயா 2 படத்தின் இயக்குனர் சந்து மொண்டேடிதான் தண்டேல் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் மீண்டும் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2021ம் ஆண்டு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இணைந்து நடித்தனர்.
இப்படத்தை அல்லு அரவிந்தின் Bunny vaas GA 2 Pictures தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீகாகுலம் பகுதியில் நடைபெறும் என சொல்லப்பட்டது. இப்படத்திற்கு DSP இசையமைக்கவுள்ளார். தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதையாகும். அதனால் சாய் பல்லவிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த படமாகவும் இருக்கும். மேலும் இப்படத்திற்கு நாக சைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார். இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிகமாகவே பட்ஜட் போட்டு எடுக்க திட்டமிட்டனர்.
இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்து இந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் படத்தின் பணிகள் முடியாதததால், இன்னும் எந்த அறிவிப்பும், அப்டேட்டும் வெளியாகவில்லை. இதற்கிடையேதான், தண்டேல் படத்தின் ஓடிடி தகவல் பற்றிய செய்திகள் வந்துள்ளன.
அதாவது தண்டேல் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட் ஃப்லிக்ஸ் வாங்கியுள்ளது என்றும், மேலும் இதுதான் நாக சைதன்யாவின் சினிமா கெர்ரியரிலேயே அதிக தொகைக்கு விற்கப்பட்ட தொகை என்றும் கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 40 கோடிக்கு ஓடிடி தளம் அப்படத்தை வாங்கியுள்ளது. தண்டேல் படத்தின் பட்ஜெட் 50 கோடியே ஆகும். இந்தநிலையில் ஓடிடி தளமே 40 கோடிக்கு வாங்கியுள்ளதால், வசூல் ரீதியாக சரிவை சந்திக்காது என்றே கூறப்படுகிறது. அதேபோல், ஒரு மீனவனின் உண்மையான கதை என்பதால், இப்படம் விமர்சன ரீதியாகவும் சிறப்பான வெற்றியை தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.