விடாமுயற்சி படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்.. ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஃபிக்ஸ் ஆன ஒடிடி!

விடாமுயற்சி
விடாமுயற்சி
Updated on

அஜித்தின் 'துணிவு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வந்தனர்.

ஆனால் அஜித்தோ, பைக் ரைட், சுற்றுலா என பிஸியாக இருந்துவந்தார். இதையடுத்து, அவரது 'AK 62' படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் சந்தோஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்டுவந்தது. இதையடுத்து சந்தோஷ் சிவன் அந்த ப்ராஜக்ட்டிலிருந்து விலகினார். இதையடுத்து 'AK 62' மகிழ் திருமேனி இயக்கப்போவதாக தகவல் வெளியாகி, பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்கள் வரும் வரும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி 'AK 62' படத்தின் டைட்டில் வெளியானது. 'விடாமுயற்சி' என்ற டைட்டிலுடன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷ்ன்ஸ், இயக்குநர் மகிழ் திருமேனி, இசை அனிருத் என இவர்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸாவதற்கு முன்பே இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com