பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் படத்தின் புதிய அறிவிப்பு!

Teenz movie poster
Teenz movie poster

த்ரில்லர் அட்வென்சர் படமாக உருவான டீன்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் போஸ்டர் வெளியாகி, இது வெளியீட்டு தேதி அப்டேட் என்பதை உறுதிசெய்துள்ளது.

தனித்துவமான படங்களை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர் பார்த்திபன். அதில் உழைப்பிற்கான வெற்றியும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்தவகையில், அவர் தனது அடுத்தப் படத்தின் பெயர் டீன்ஸ் என்று முன்னதாக அறிவித்தார். அதன்பின்னர், இந்த படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் பாடலில் ஜோவிகா உள்ளிட்ட சிலர் நடனமாடுவது ட்ரெண்டானது. மேலும் அந்தப் பாடலில் பார்த்திபனும் ஒரு வசனம் கூறியிருந்தார்.

இதனால், படத்தின் எதிர்பார்ப்பு கூடியது. இப்படத்தில் பார்த்திபன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். பார்த்திபன் மற்றும் இமான் இணைவது இதுவே முதல் முறையாகும். இவர் இசையமைத்த டீன்ஸ் பாடல்களுக்கு ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா கோஷல், நித்ய ஸ்ரீ ஆகியோர் பாடல் பாடியிருக்கின்றனர்.

இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஸன் வேலைகள் முடிந்து படப்பிடிப்பு இந்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சமீபத்தில் டீன்ஸ் படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டீன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ முதல்முறையாக சென்சார் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனை உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து பாராட்டியுள்ளது.

இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், “TEENZ-first look-released in theatres with a censor certificate, இதுக்காக world book of records ஒரு சான்றிதழ் வழங்கினார்கள். அதை இ(சை)மானுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்க, நேற்று ஒரு சின்ன மேடையமைத்துக் கொண்டாடினோம். இனி 'Teenz' உங்கள் மனதில் இடம் பெற தொடர் முயற்சிகளில் ஈடுபடும்.” என்று பதிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
நியூ தக்... கமலின் தக் லைஃப் படத்தில் STR... மாஸ் புரோமோ வைரல்!
Teenz movie poster

இதனையடுத்து தற்போது டீன்ஸ் படக்குழு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்படத்தில் நடிக்கும் சிறுவர்களின் புகைப்படத்துடனும், ‘இம்மாதம் வருகிறோம். பிரமாதம் என்று நீங்கள் பாராட்ட.’ என்ற எழுத்துடனும் போஸ்டர் வெளியானது. இதன்மூலம் இப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

இப்படத்தின் பாடல்களுக்கும், வித்தியாசமான கதைக்களத்திற்கும் தமிழக மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com