ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் லியோ வரை.. பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்ன படம்?

leo jigarthanda Double X
leo jigarthanda Double X
Updated on

இந்த வருடம் பொங்கலுக்கு எந்த டிவியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகும் என பார்க்கலாம்.

விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில், பொங்கலன்று ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பொதுவாகவே புதுப்படம் ரிலீஸானால் இளைஞர்கள் மட்டுமே உடனே திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பார்கள். தற்போது ஒடிடியின் ஆதிக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் பலரும் ஒடிடியில் புது படங்களை பார்த்து விடுகின்றனர். ஆனால் சிலர் கேபிள் டிவியை மட்டுமே கண்டு வருவதால் இது போன்று தீபாவளி, பொங்கலுக்கு ஒளிபரப்பாகும் படங்களை அவர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.

ஏற்கனவே பார்த்த மக்களும், டிவியில் விளம்பரங்களோடு குடும்பமாக சந்தோஷமாக பார்ப்பதை விரும்புவார்கள். ஆண்டுதோறும் இது போன்ற பண்டிகை நாட்களில் புது படங்கள் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு லியோ திரைப்படம் ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையான வரும் 15ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு லியோ திரைப்படம் ஒளிப்பரப்படுகிறது.

தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

கலைஞர் டிவியில் பொங்கல் சிறப்பு படமாக அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி தேதியும், மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 14ஆம் தேதி ஜவான் படமும், ஜனவரி 15ஆம் தேதி மார்க் ஆண்டனி படமும், ஜனவரி 16ஆம் தேதி வீரன் படமும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் ஜனவரி 14ஆம் தேதி மதியம் 3 மணிக்கு பரம்பொருள் திரைப்படமும், 15ஆம் தேதி காலை 11.30-க்கு யோகி பாபு நடித்த லக்கி மேன் திரைப்படமும், மாலை 5:30 மணிக்கு உதயநிதியின் மாமன்னன் படமும், இரவு 9 மணிக்கு போர் தொழில் ஆகிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி மாலை 5 30 க்கு பிச்சைக்காரன் 2 மற்றும் இரவு 9 மணிக்கு குட் நைட் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

logo
Kalki Online
kalkionline.com