கோட் படத்தில் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்... ரசிகர்கள் குஷி!

Yuvan vijay combo
Yuvan vijay combo

கோட் படத்தில் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலில் தாவிய நடிகர் விஜய் தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. இந்த படத்தை தொடர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகும், அதன் பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதுமாக விஜய் அறிவித்துள்ளார்.

இதனால் விஜய்யின் ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், GOAT பட ஒவ்வொரு அப்டேட்டையும் கொண்டாடி வருகின்றனர். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது. வெங்கட் பிரபு கதை என்றாலே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதிலும் இந்த படத்தில் மைக் மோகன், ஸ்னேகா, லைலா, பிரசாந்த் என 90ஸ் நடிகர்கள் இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்துள்ளது.

இதுதவிர நடிகை திரிஷாவும் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பல்வேறு ஆச்சர்யங்கள் நிறைந்துள்ள GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்:
கார்த்தியின் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
Yuvan vijay combo

GOAT திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு என்கிற பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. யுவன் இசையில் விஜய் பாடிய இப்பாடலுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி விசில் போடு பாடல் கடும் விமர்சனங்களையும் சந்தித்தது.

விசில் போடு பாடலில் சொதப்பிய விஜய் - யுவன் கூட்டணி, ரசிகர்களை திருப்தி படுத்த மற்றுமொரு பாடலிலும் இணைந்து பணியாற்றி இருக்கிறதாம். அப்பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் முதன்முறையாக யுவன் இசையில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். அப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என கூறப்படுகிறது. அநேகமாக விஜய்யின் பிறந்தநாளன்று அப்பாடல் வெளியாக வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com