மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

Mariselvaraj
Mariselvaraj

ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி மாரி செல்வராஜ் எடுக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது என்று படக்கூழு அறிவித்துள்ளது. இப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் கேரளா நடிகை நடிக்கவுள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் தென்னிந்தியா சினிமாவையே திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய இப்படம் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் தனுஷை கதாநாயகனாக வைத்து கர்ணன் படம் இயக்கினார். இப்படமும் தமிழக ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் படம் மாரி செல்வராஜ் இயக்கிய மூன்றாவது திரைப்படமாகும். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் இதற்கு முன்னரே இயக்குனர் ராமின் துணை இயக்குனராக பணியாற்றினார். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகப் பணியாற்றினார்.

சில காலத்திற்கு முன்னரே அதாவது மாமன்னன் படம் வெளியாகி வெற்றிபெற்ற சில நாட்களிலேயே மாரி செல்வராஜ் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார் என்றச் செய்தி கசிய ஆரம்பித்தது. அதன்பின்னர் அந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றச் செய்தியும் சினிமா வட்டாரத்திலிருந்து கசிந்தது. இன்னும் சொல்லப்போனால் மாமன்னன் படத்திற்கு முன்னதாகவே இந்தப் படத்தை இயக்க திட்டமிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் சில காரணங்களால் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை முதலில் இயக்கினார்.

Mariselvaraj and team
Mariselvaraj and team

இதனைத் தொடர்ந்து சிறுவர்களை வைத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து வாழை என்றப் படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிவடையவுள்ள நிலையில் தற்போது ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏ. ஆர். முருகதாஸுடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
Mariselvaraj

அதாவது மாரி செல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் என்றச் செய்தி வெளியாகியுள்ளது. பா.இரஞ்சித் மற்றும் அப்லாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். அதேபோல் கதாநாயகியாக அனுபமா பரமேஷ்வரன் நடிக்கவுள்ளார். இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கைப் பற்றிய உண்மைக் கதையைத் தழுவி உருவாகவுள்ள படமாகும். இந்த கதைக்காக துருவ் விக்ரம் பல நாட்களாகப் கபடிப் பயிற்சி எடுத்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com