தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்ஸ்!

தனுஷின்  ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்ஸ்!
Published on

அருண் மாதேஸ்வரண் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது. தனுஷின் வாத்தி படத்திற்கு பிறகு ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள படம், கேப்டன் மில்லர். இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது.கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படக்காட்சி ஒன்று சமீபத்தில் ’லீக்’ ஆகி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவியது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சியைப் படக்குழு தற்போது நிறைவு செய்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைய இருக்கின்றது. எனவே படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேப்டன் மில்லர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com