

தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நடிப்பை நிறுத்தி விட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ , பிரியாமணி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் தினமும் இந்த படத்தை பற்றிய புதுப்புது ஹிட் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருப்பதால் இந்த படத்திற்காக எதிர்ப்பார்ப்பை மக்களிடைய அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே விஜய் - அனிருத் கூட்டணியில் பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதால், 'ஜனநாயகன்' அவர்களின் இன்னொரு மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’, ‘செல்ல மகளே’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் நான்காவது பாடலான ராவண மவன்டா பாடலை படக்குழு நேற்று (ஜனவரி 2-ம்தேதி) வெளியானது.
இந்நிலையில் வரும் 9-ம்தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஜன நாயகன் படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி டிரெய்லர்கள் இன்று (ஜனவரி 3-ம் தேதி) மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து உள்ளது. ஒரு அதிரடி கதையை என்பதை குறிக்கும் வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விஜய், பாபி தியோல் மற்றும் மமிதா பைஜுவுடன் துப்பாக்கியை ஏந்தியிருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லரை தியேட்டர்களில் ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திருநெல்வேலியில் உள்ள ARK ராம் முத்துராம் சினிமாஸ் ஆர்ஜிபி-யில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'ஜனநாயகன்' திரைப்படம் இதுவரை 24,500 டிக்கெட்டுகள் முன்பதிவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மொத்தமாக 7.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு படத்தின் டிரைலர் வெளியாகும் முன்பே இத்தகைய வசூல் சாதனை நிகழ்ந்திருப்பது, 'ஜனநாயகன்' மீது ரசிகர்களும் பொதுமக்களும் வைத்துள்ள எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகன் திரைப்படம் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதற்கும் ரசிகர்கள் வாங்க போட்டா போட்டி கொண்டு வாங்குவதாகும் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபாஸின் தி ராஜா சாப் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி (ஜனவரி 10 வெளியீடு) படங்களும் ஜன நாயகன் படத்துடன் இணைந்து மோத உள்ளதால் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
அதுமட்டுமின்றி ஜன நாயகன் திரைப்படம் விஜய்க்கு அவரது திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், இது தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் முத்திரையைப் பதிக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.