சினிமா துறையில் ஒரு குறிப்பிட்ட பங்கை ஆற்றும் துறையினருக்கு ஆஸ்காரில் அங்கீகாரம் கொடுக்காமல் இருந்து வந்தது. இனி அவர்களுக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரையுலகில் மிகப்பெரிய விருது என்றால், அது ஆஸ்கார் விருதுதான். உலக படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், படம், நடிகை, துணை நடிகர் நடிகை, இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விழா கடந்த மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்தது.
அந்தவகையில் சினிமா துறையில் பெரிய பங்காற்றி வரும் ஒரு துறையினருக்கு ஆஸ்கார் விருது பிரிவே இல்லை என்பது பல காலமாகவே வருத்தத்திற்குறிய விஷயமாக இருந்து வந்தது. தற்போது அந்த வருத்தத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது.
ஆம்! ஒருபடம் உருவாக, இயக்குநர் மற்றும் நடிகை நடிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இசையமைப்பாளர், பாடகர், தொகுப்பாளர், கேமரா மேன், செட் மாஸ்டர், ஸ்டன்ட் மாஸ்டர் போன்ற எண்ணற்ற துறையினரின் பங்களிப்பும் தேவை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம் தான்.
அப்படித்தான் தற்போது ஸ்டன்ட் மாஸ்டருக்கு ஆஸ்கார் விருது பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இந்த புதிய விருதை "டாம் குரூஸ் விருது" என்று நகைச்சுவையாகப் பெயரிட்டுள்ளனர்.
இது, அவரது மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களில் அவர் வெளிக்காட்டிய துணிச்சலான ஸ்டண்ட்களை கௌரவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நிபுணர்கள் தொடர்ந்து பல காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தி ஃபால் கை படத்தில் ஸ்டண்ட்மேனாக நடித்த பிறகு ரியான் கோஸ்லிங் அதை ஆதரித்தபோது இது வேகமெடுத்தது.
கடந்த 2016ம் ஆண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கக் கோரி 46,000+ கையொப்பங்களுடன் ஒரு ஆன்லைன் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.