OCI அட்டைதாரருக்கு பாடமாகும் இம்ரான் கான்: இந்தியாவை விட்டு நாடு கடத்தப்படுகிறாரா?

போராட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட FRRO! OCI குடியுரிமையின் புதிய விதிகள். இம்ரான் கானின் 100 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் ஆகிறதா?
imran khan
Imran Khan controversy ABP Nadu
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் சகோதரி மகனும் நடிகருமான இம்ரான் கான், தற்போது தேசிய அளவில் பேசப்படும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். அமீர்கான் நடித்துள்ள திரைப்படங்களில் அவரது சிறு வயது வேடங்களில் இம்ரான் கான் அறிமுகமானார். ஆமிர் கான் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படமான 'கயாமத் சே கயாமத் தக்'திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இம்ரான் கான் அறிமுகமானார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜானே தூ ஜானே நா ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக பாலிவுட்டில் நுழைந்தார். அவரது முதல் திரைப்படமே ஆமீர்கான் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த "ஐ ஹேட் லவ் ஸ்டோரி, மை பிரதர் கீ துல்ஹன் , டெல்லி பெல்லி"ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகி அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது. ஆனால், அவர் வேகமாக முன்னேறிய போதும் அதே வேகத்தில் சறுக்கவும் தொடங்கினார்.

சமீப காலத்தில் டெல்லி மற்றும் மும்பையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டங்களில் ஒரு சில சினிமா நடிகர்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா , ஷப்னா ஆஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு பிரபலமானதை தொடர்ந்து, இம்ரான் கானும் மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு சிக்கல்கள் வரத் தொடங்கியது.

மும்பையைச் சேர்ந்த பாஜக தலைவர் கிரீட் சோமையா என்பவர் காவல்துறையில் அமெரிக்க குடிமகனான இம்ரான் கான், இந்தியாவில் நடைபெறும் சட்ட விரோதமான போராட்டத்தில் பங்கேற்றதாக புகார் அளித்திருந்தார். அந்த புகரின் உண்மைத்தன்மையை கண்டறிந்த காவல்துறை விசாரணையில் இறங்கியது. அதை தொடர்ந்து அவரை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு FRRO உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கான் அமெரிக்காவின் குடிமகன் ஆவார் , இந்தியாவை பொறுத்தவரையில் அவர் வெளிநாட்டு இந்திய குடிமகன் (OCI) அட்டையை வைத்துள்ளார்.

jane tu jane na
imran Khan Rotten tomatoes

பாஜக அரசு 2025-ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தில் பல விதிகளை கொண்டு வந்துள்ளது. குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025-இன் பிரிவு 7(2)(c) மற்றும் பிரிவு 29- கீழ் , வெளிநாட்டை சேர்ந்தவர்களோ , வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களும் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் , அவர்கள் சட்ட விதிகளை மீறும் போது, குடியுரிமை அதிகாரிகள் அவர்களை வெளியேற்றுவதற்கு முழு உரிமையும் உண்டு. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க முடியும்.

தற்போது இம்ரான் கான் இந்த அறிவிப்பை எதிர்த்து அவரது வழக்கறிஞர்களான சுல்பிகார் மேமன், பர்வேஸ் மேமன் ஆகியோர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் உள்ளார். இந்த வழக்கு இது நீதிமன்றம் என்ன மாதிரி முடிவை எடுக்கும் என்று சட்ட வல்லுனர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், இம்ரான் கானுக்கு நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பு தான் ,எதிர்காலத்தில் விதிகளை மீறும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். அதை முன்னுதாரணமாகக் கொண்டு விதிகளை மீறும் மற்ற வெளிநாட்டினருக்கு தீர்ப்பு வழங்கப்படும்.

இம்ரான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால், இந்தியாவில் உள்ள அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது?

logo
Kalki Online
kalkionline.com