ஆஸ்கர் விருதுகள் 2025... யாருக்கு என்ன விருது? முழு விவரம் இதோ!

oscar 2025
oscar 2025
Published on

2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருது பெற்றவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது. அந்த வகையில், 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, அதிகாலை 5.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார். அதில் ஸ்பானிஷ் திரைப்படமான 'எமிலியா பெரெஸ்' என்ற படத்தில் நடித்த கார்லா சோபியா காஸ்கான் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, இவர் தான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கையாகும். மேலும், இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் அதிகபட்சமாக 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலம் அல்லாத ஒரு வெளிநாட்டு திரைப்படம் இத்தனை பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள குறும்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அனிமேஷன் படம் - ப்லொவ் (Flow)

சிறந்த துணை நடிகர் - கீரான் கல்கின் (A Real Pain Movie)

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆப் தி சைப்ரஸ் (IN THE SHADOW OF THE CYPRESS)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பால் டேஸ்வெல் (Wicked Movie)

இதையும் படியுங்கள்:
நல்லவன்னு சர்டிஃபிகேட் வேணுமா? கெட்டவன்னு பேட்ஜ் வேணுமா? - இந்த 10 போதும்!
oscar 2025

சிறந்த அசல் திரைக்கதை - சீன் பேக்கர் (Anora Movie)

சிறந்த திரைக்கதை - சீன் பேக்கர் இயக்கிய Anora

சிறந்த இயக்குனர் -சீன் பேக்கர் (Anora)

சிறந்த படத்தொகுப்பு - Anora

சிறந்த நடிகை - மில்கி மேடிசன் (Anora)

சிறந்த நடிகர் - அட்ரியன் ப்ரோட்ய் (THE BRUTALIST)

சிறந்த பின்னணி இசை - டேனியல் பிளூம்பெர்க் (THE BRUTALIST)

சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை - கான்க்ளேவ் (Peter Straughan Movie)

சிறந்த சர்வதேச திரைப்படம் - வால்டர் சல்லெஸ் (I'M STILL HERE)

சிறந்த ஒளிப்பதிவு - லொள் ஸ்ரவ்லே (THE BRUTALIST)

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - விக்டோரியா வார்மேர்டாம் அண்ட் ட்ரெண்ட் (I'M NOT A ROBOT)

சிறந்த கிராபிக்ஸ் - டுனே 2 (DUNE: PART TWO)

சிறந்த ஒலி வடிவமைப்பு - டுனே 2 (DUNE: PART TWO)

சிறந்த ஆவண திரைப்படம் - நோ அதர் லேன்ட் (NO OTHER LAND)

இதையும் படியுங்கள்:
மகா கும்பமேளாவில் 50 ஆயிரம் பக்தர்கள் குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
oscar 2025

சிறந்த ஆவண குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஓர்சேஸ்ட்ரா (THE ONLY GIRL IN THE ORCHESTRA)

சிறந்த பாடலுக்கான விருது - EMILIA PEREZ MOVIE ( El Mal SONG)

சிறந்த கலை வடிவமைப்பு - நாதன் கிரௌலே, லீ சண்டல்ஸ் (WICKED MOVIE)

சிறந்த துணை நடிகை - ஜோ சாலடான (EMILIA PÉREZ MOVIE)

இதில் அதிகபட்சமாக அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com