OTT-யில் வெளியானது ஆஸ்கார் விருதுகளைக் குவித்த Oppenheimer!

Oppenheimer
Oppenheimer
Published on

7 ஆஸ்கார் விருதுகளைக் குவித்த கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபென்ஹெய்மர் படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்தப் படம் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, எமிலி ப்ளன்ட், ராபர்ட் டௌனி ஜேஆர் ஆகியோர் நடித்த ஓபென்ஹெய்மர் படம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. உலகம் முழுவதும் இந்தப் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களின் மனதைப் பூர்த்தி செய்துவிட்டது என்றே கூற வேண்டும். 100M டாலர் பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் 964M டாலர் வசூலை ஈட்டியது.

இந்தப் படத்தின் வரவேற்பிற்கு ஹிட்டிற்கும் முதல் மற்றும் முக்கியமான காரணம் இது ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால்தான். ஆம்! இது அமெரிக்கன் இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓபென்ஹெய்மர் என்பவரின்  உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்தப் படம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராபர்ட் அணுகுண்டை (Nuclear bomb) உருவாக்கியதன் கதையாகும். இரண்டாவது முக்கிய காரணம் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்தான். அறிவியல் சம்பந்தப்பட்டப் படங்களை எடுப்பதில் இவரை அடித்துக்கொள்ள யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படம் சிறந்தத் துணை நடிகர், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு , சிறந்தப் படத்தொகுப்பு மற்றும் சிறந்தப் படம் என மொத்தம் 7 ஆஸ்கார் விருதுகளை வாங்கியது. விருதுகளை மட்டுமல்ல பலப் பட்டங்களையும் அள்ளிக் குவித்தது.

அதாவது உலகளவில் வசூல் சாதனைப் படைத்த படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. உலகப்போர் 2 பற்றிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம், அதிக வசூல் ஈட்டிய உண்மைக் கதைப் படம், R மதிப்பிடப்பட்ட படங்களில் இரண்டாவது வசூல் சாதனை குவித்தப் படம் ஆகிய பட்டங்களை இப்படம் சுமந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
படம் 1; கெட்டப் 12! ஒரே படத்தில் 12 கெட்டப்பில் அசத்திய நடிகர் ரவிகாந்த்!
Oppenheimer

அந்தவகையில் இன்று ஓபென்ஹெய்மர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளது. ஓடிடி தளமான ஜியோ சினிமாவில்தான் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொழிகளிலும் ஓபென்ஹெய்மர் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com