படைப்பாளிகளை கொல்லும் ஓ.டி.டி நிறுவனங்கள் - அனுராக் காஷ்யப் ஆதங்கம்..!

Anurag Kashyap
Anurag Kashyap
Published on

சினிமா துறையில் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்று அறியப்படும் இயக்குனர் அனுராக் காஷ்யப், சமீபத்தில் Netflix நிறுவனத்தை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த நிறுவனம் தரமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராக் காஷ்யப், ஒரு ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், ஹன்சல் மேத்தா இயக்கிய 'Scam 1992' தொடரின் வெற்றியை நெட்பிளிக்ஸ் எப்படி எதிர்கொண்டது என்பதைப் பற்றி பேசினார். SonyLIV தளத்தில் வெளியான இந்தத் தொடர் பெரும் வெற்றியைப் பெற்றது.

"Scam 1992-ஐ நிராகரித்த நெட்பிளிக்ஸ் நிர்வாகியை வேலையில் இருந்து நீக்கினார்கள். இப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள்," என்று அனுராக் காஷ்யப் கூறினார்.

உலகெங்கும் உள்ள திரைப்படங்களையும், தொடர்களையும் பார்க்க வாய்ப்பு கிடைத்த பிறகு, இந்தியப் படைப்புகள் தரம் குறைந்தவையாக இருப்பதாக மக்கள் உணர்வதாக காஷ்யப் குறிப்பிட்டார்.

"மற்ற நாடுகளில் உருவாகும் படைப்புகளுடன் நேரடியாக ஒப்பிடும்போது, நமது படங்கள் மற்றும் தொடர்கள் பின்தங்கியிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அதே நேரத்தில், நாம் டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களைக் குறிவைத்து, எளிமையான கண்டென்ட்டை (dumbing down) உருவாக்குகிறோம். அவர்கள் இலவசமாகவே பார்க்கக்கூடிய ண்டென்ட்டை, இப்போது பணம் கொடுத்து பார்க்க வைக்க முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
கல்விப் புரட்சிக்கு வித்திட்ட Jean-Jacques Rousseauவின் கல்வித் தத்துவம் சொல்லும் உண்மை என்ன?
Anurag Kashyap

"Sacred Games வெளியானபோது, நெட்பிளிக்ஸ் இந்தியாவில் இல்லை. ஆனால், மக்கள் சந்தா செலுத்தி அந்தத் தொடரைப் பார்த்தார்கள். எனவே, மக்கள் பணம் கொடுத்து பார்க்கக்கூடிய ஒரு தரமான படைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். Paatal Lok மற்றும் Scam 1992 போன்ற தொடர்களுக்கும் இது பொருந்தும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது அனுராக் காஷ்யப் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் அதன் தலைவர் டெட் சரண்டோஸையும் (Ted Sarandos) நேரடியாகத் தாக்குவது முதல் முறை அல்ல. கடந்த ஜூன் மாதம், இந்திய பார்வையாளர்களின் ரசனையையும், கதை சொல்லும் முறையையும் நெட்பிளிக்ஸ் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

"அவர்களுக்கு இந்தியா எப்படி தெரியும் என்று கற்பிக்கப்படுகிறதோ, அப்படித்தான் தெரியும். டெட் சரண்டோஸுக்கு இந்தியா புரியாது. அதனால், இந்தியாவில் உள்ள அலுவலகம் சொல்வதை அவர்கள் நம்புகிறார்கள். அந்த முட்டாள்தனத்தை அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்," என்று காஷ்யப் அப்போது கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
உங்கள் அலமாரியை மாற்றப்போகும் 5 ட்ரெண்டுகள்! ஜென் Z ஃபேஷன் ஸ்டைல் இதோ!
Anurag Kashyap

இதற்கு முன்பு, Sacred Games தொடர் இந்திய சந்தையில் நெட்பிளிக்ஸின் நுழைவுக்குச் சரியான வழி அல்ல என்று டெட் சரண்டோஸ் கூறியபோது, காஷ்யப் அவரை "முட்டாள்" என்று அழைத்திருந்தார்.

அனுராக் காஷ்யப் தற்போது தனது புதிய படமான 'Nishaanchi' வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார். இந்தப் படம் செப்டம்பர் 19 அன்று வெளியாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com