இந்த வாரம் ஓடிடியில் பார்த்து மகிழ: திரில்லர் வாரண்ட் முதல் நகைச்சுவையான பீஷ்மர் வரை..!

OTT RELEASE
OTT RELEASE
Updated on

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள ஒரு சில திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம். இந்த திரைப்படங்கள் காதல் , நகைச்சுவை , திகில் , அதிரடி ஆக்சன் என்று பலதரப்பட்ட ரசிகர்களை கவரும்.

1.வாரண்ட் : தமிழ் 

திரைக்கதை: ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற " விலங்கு யுனிவர்சிலிருந்து " வெளிவரும் திரைப்படம் தான் வாரண்ட்.  ஒரு காலத்தில் கருணை மிகுந்த காவலராக இருந்த கருப்பசாமி , மற்றவர்களால் கேலி செய்யப்படும் போது இறுதியில் நீதியை நிலைநாட்ட அசுரத்தனமாக மாறுகிறார். 

நடிகர்கள் : பிரசாந்த் பாண்டியராஜன் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்:

இயக்கம்: விக்னேஷ் நடராஜன் 

வெளியீடு: மே 22 முதல் ZEE 5 தளத்தில் வெளியாகிறது.

warrant
warrant source:TOI

2.சாத்தான்: தி டார்க்  – தமிழ் 

திரைக்கதை:  இந்த திரைப்படம் இரண்டு வேறு வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது. திகில் நிறைந்த அமானுஷ்ய கதையைக் கொண்டுள்ளது. மலைக் கிராமத்தில் மார்சலின் என்ற பேய் பிடித்த ஒரு பெண்மணி மிகவும் வெறியுடன் நடந்துக் கொள்கிறாள். அவளை காப்பாற்ற மகளும் , மகளின் காதலனும் இணைந்து செயல்படுகிறார்கள் . இறுதியில் என்ன ஆனது? என்பது தான் திகில் நிறைந்த மர்மக் கதை.

நடிகர்கள்: ஃபிரெட்ரிக் ஜான் , ஐரா, சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். 

இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம்

வெளியீடு : Prime Video , Aha Tamil , Tentkotta

3. சதிலீலாவதி : தெலுங்கு & தமிழ் 

திரைக்கதை : இது ஒரு தெலுங்கு மொழி காதல், நகைச்சுவை சார்ந்த திரைப்படமாகும். விவாகரத்து கோரும் கணவனை எவ்வாறு தன் செயல்பாடுகள் மூலம் மனைவி மாற்றுகிறாள் என்பதை சுவாரசியம் மிகுந்த திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் : தேவ் மோகன் , லாவண்யா திரிபாதி , நரேஷ், விடிவி கணேஷ் , மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்கம் : தட்டினேனி சத்யா 

வெளியீடு : மே 20 ஆம் தேதி முதல் SUN NXT தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

Sathileelavathi
SathileelavathiSource:fandango

4.மதுவிது : மலையாளம் 

திரைக்கதை : அடூர் என்ற ஊரில் வசிக்கும் அமிர்தராஜ் குடும்பத்தில் அனைவருமே ஆண்கள். இதனால் தனக்கு ஒரு பெண் துணையை தேட அவனுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இறுதியாக காதலில் விழும் அவன் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. காதலில் தவறான புரிதல்கள், மாறும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அவனுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. படம் காதலும் நகைச்சுவை காட்சிகளும் நிறைந்த கலவையாக இருக்கின்றது.

நடிகர்கள் :  ஷேராப்தின் , கல்யாணி பணிக்கர் , ஜெகதீஷ் , சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் : விஷ்ணு அரவிந்த்

வெளியீடு : மே 22 ஆம் தேதி முதல் Sony LIV தளத்தில் வெளியாக உள்ளது.

5.பீஷ்மர்: மலையாளம் 

திரைக்கதை : மென்மையான நகைச்சுவையும் , இதமான இசையையும் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. பாலக்காடு கிராமத்தில் காய்கறிக் கடை வைத்திருக்கும் முருகன்(தியான்) தனது முன்னாள் காதலியைப் பற்றி நினைத்து ஏங்குகிறான். அப்போது ஏதேச்சையாக இன்னொரு நபரை சந்திக்கிறான் , அதன் பின்னர் கலகலப்பு மிகுந்து சுவாரசியத்துடன் செல்லும் நகைச்சுவைக் கலந்த திரைப்படம் இது.

நடிகர்கள்: தியான் ஶ்ரீனிவாசன் , விஷ்ணு உன்னிகிருஷ்ணன் , திவ்யா பிள்ளை , அமைரா கோஸ்வாமி , இந்திரன்ஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்கம்: ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் 

வெளியீடு : மே 22 தேதியிலிருந்து Prime Video, SUN NXT தளங்களில் காணலாம்.

Bhismar
Bhismarsource:district
logo
Kalki Online
kalkionline.com