தங்கலான்
தங்கலான்

விக்ரம் ரசிகர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. தங்கலான் அப்டேட் குறித்த தகவல்!

Published on

சியான் விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளார் பா.ரஞ்சித். ஏற்கனவே இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் என அடுத்தடுத்து ரிலீஸாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தில், விக்ரம் வித்தியாச தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்.

இந்நிலையில் 2024 பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால், ஜனவரி 26 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் முடிவடையாமல் பட வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் என்று இந்தியாவே பரபரப்பாக இருக்கும். படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துக்கொள்ளலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
Tree shrew: இவரு டாய்லெட்லதான் போவாராம்.. விலங்கு - தாவரம் உறவுன்னா இப்படி இருக்கணும்!
தங்கலான்
logo
Kalki Online
kalkionline.com