ரேட்டிங்(2.5 / 5)
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'படை தலைவன்'. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல் அப்பா விஜயகாந்த்தை போல் அதிரடி ஆக்ஷன் காட்சியில் அதகளம் செய்துள்ளார் மகன் சண்முக பாண்டியன்.
தனது முந்தைய படங்களை விட ஓரளவு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மாமாவை தட்டி கேட்பது, அதிகாரியிடம் யானைக்காக கெஞ்சுவது என ஒரு சில காட்சிகளில் சண்முக பாண்டியனின் நடிப்பு நன்றாகவே உள்ளது. ஆனால் இவரது நடிப்பு ஓரளவு சிறப்பாக இருந்தும் சரியான கதையையும், திரைக்கதையும் டைரக்டர் அன்பு இப்படத்தில் வைக்காததால், சண்முக பாண்டியனின் நடிப்பை முழுமையாக ரசிக்க முடியவில்லை. டைரக்டர் இன்னும் திரைக்கதையை அமைத்து சண்முக பாண்டியனை சிறப்பாக பயன் படுத்தி இருக்கலாம்...
மணியன் என்ற யானையுடன் மகிழ்ச்சியாக தனது குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் சண்முக பாண்டியன். உறவினர் ஒருவரின் சூழ்சியால் யானையை வனவிலங்கு அலுவலகர்கள் பிடித்து சென்று விடுகிறார்கள். அங்கே சென்று நம் ஹீரோ சண்முக பாண்டியன் விசாரிக்கும் போது யானை காட்டிற்குள் ஓடி விடுவதாக சொல்கிறார்கள். அந்த யானை, விலங்குகளை பலி கொடுக்கும் வில்லன் கே.ஜி.எப் ராமிடம் மாட்டி கொள்கிறது. யானையை எப்படி மீட்கிறார் நம் ஹீரோ என்று சொல்கிறது கதை.
அருள் தாஸ், கஸ்தூரி ராஜா, ராம் மூவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. இது போன்ற ஒன்லைனில் பல படங்கள் வந்துள்ளது. சொன்ன விதத்திலாவது மாற்றி சொல்லி இருக்கலாம். சண்டை காட்சிகளில் இருக்கும் வேகம் திரைக்கதையில் இல்லை. நகைசுவை, காதல் போன்ற விஷங்களுக்கு படத்தில் வாய்ப்பு இருந்தும் துளி கூட காட்சிகளில் இல்லை. இளையராஜாவின் பின்னணி இசையும், சதிஷ் ஒளிப்பதிவும் சற்று ஆறுதலான விஷயங்கள். விஜயகாந்த்தை AI தொழில் நுட்பத்தில் கொண்டு வந்திருப்பது ஒர்க் அவட் ஆக வில்லை. ஏதோ பொம்மை விஜயகாந்த்தை பார்ப்பது போல் உள்ளது.
கடை சியாக சண்முக பாண்டியனுக்கு மூன்று டிப்ஸ்
1. நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
2. அப்பாவின் பட பாடல்களை உங்கள் படத்தில் பயன் படுத்தாதீர்கள் அந்த பாடல்களின் நாயகன் என்றும் கேப்டன் மட்டுமே.
3. AI நுட்பத்தில் அப்பாவை படத்தில் கொண்டு வருகிறேன் என்று காமெடி செய்யாதீர்கள். அப்பா என்றும் மக்கள் மனதில் இருக்கிறார். உங்கள் திறமையை திரையில் காட்டுங்கள். இதுவே உங்கள் அப்பா விஜய்காந்த் அவர்களுக்கு செய்யும் நன்றி கடன்.