

சினிமா என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயமாகும். சமூகத்தில் கிடைக்காத பதில்களை கூட படத்தில் தேடலாம். நம் வாழ்க்கையில் பிரதிபலிப்பே சினிமா ஆகும். அந்த கால மக்கள் முதல் இந்த கால இளைஞர்கள் வரை சினிமாவை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை. அதுவும் குறிப்பாக தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. ஓடிடி ரசிகர்கள் அதிகமாகிவிட்டதால் தியேட்டர்களில் குவியும் கூட்டம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாகவே ரீ ரிலீஸ் கலாச்சாரம் தலைதூக்கியது. கமல், ரஜினி, விஜய், அஜித் என பல நடிகர்களின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாஸ் ஹிட் அடித்தது. ஒரு காலத்ஹில் சினிமா நடிகர்களின் பிறந்தநாள் அன்றே அவர்களின் புதிய படங்களுக்கு மவுசு இருக்கும். தற்போது ஒரு சினிமா பிரபலத்தின் பிறந்தநாள் அவரின் மாஸ் ஹிட்டான படங்களை ரசிகர்கள் ரீ ரிலீஸ் கேட்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக தான் தற்போது டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பலரின் அவரின் மாஸ் ஹிட்டான படத்தை ரீ ரிலீஸ் செய்ய கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதன் படி வரும் டிசம்பர் 12ஆம் தேதி படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
'வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல' என்ற டயலாக்கிற்கு மாஸ் ரசிகர்கள் உண்டு என்றே சொல்லலாம். வெளியாகி 26 ஆண்டுகள் கடந்தும், இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இத்திரைப்படம், இப்போது மீண்டும் பெரிய திரையில் வர இருக்கிறது. சமீபத்தில் கூட இந்த படத்தில் நடந்த அனுபவம் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு இண்டெர்வியூவில் பேசியிருந்தது ட்ரெண்டானது. அதில் சிவாஜி கணேஷனுக்கே அவர் நடிப்பு சொல்லி கொடுத்ததாக தெரிவித்தார். இதை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர். ரஜினியின் 75ஆவது பிறந்தநாளில் படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கல்லா கட்டாவுள்ளது.