சிரிஞ்சீவி தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்!

Actor chiranjeevi
Actor chiranjeevi

சிரிஞ்சீவி தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர். வசூலிலும், நடிப்பிலும் தனக்கென முத்திரை பதித்தவர் சிரஞ்சீவி. 150 படங்களுக்கு மேல் நடித்த சிரஞ்சீவிக்கு இந்த ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட் டுள்ளது.சிரஞ்சீவிக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்து உள்ளது.

கென்னிதல சிவசங்கர வர பிரஷாத் என்ற இயற் பெயர் கொண்ட சிரஞ்சீவி ஒன்றிணைந்த ஆந்திராவில் கடந்த 1955 ஆம் ஆண்டு பிறந்தவர்.1976 ஆம் ஆண்டு சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்பு கலை பயின்றார். படிக்கும் போது ரஜினியின் நட்பு கிடைத்தது. சில மேடை நாடகத்திலும் நடித்தார் சிரஞ்சீவி.1978 தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் வில்லன், அடியாள், குணச்சித்தர கதாப்பாத்திரம் என பல வேடங்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்தார்.

நடிப்போடு மட்டுமில்லாமல் சிறந்த நடன திறமை கொண்டவர் சிரஞ்சீவி. இவர் உடலை வளைத்து வித்தியாசமாக நடனம் ஆடுவதை பார்க்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஆந்திராவில் உள்ளது.                                    காமர்சியல் படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தந்துள்ளார் சிரஞ்சீவி.1987 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ருத்ர வீணா திரைப்படம் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசியது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் நடித்து வெளியான ஸ்வயம் கிருஷி திரைப்படம் மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.                                         

1989 ஆம் ஆண்டு ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தில் ரஜினியின் நட்புக்காக ஒரு சண்டை காட்சியில் நடித்திருப்பார் சிரஞ்சீவி. இந்த காட்சிக்கு தமிழ் மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. 2008 ஆம் ஆண்டு பிராஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சி தொடங்கினார் சிரஞ்சீவி. சினிமா செய்ய தெரிந்தவருக்கு 'அரசியல் ' செய்ய தெரியாததால் தனது பிராஜா ராஜ்ஜியத்தை 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

2019 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் பெரிய வரவேற்ப்பை பெற வில்லை. அதன் பிறகு வெளியான சில சிரஞ்சீவி படங்களும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் நுழைந்த புதியவர்கள் வருகையும், ரசிகர்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். சிரஞ்சீவியின் பல படங்கள் டப்பிங் செய்யப்பட்டு தமிழ் நாட்டில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
வீசப்பட்ட சூப்.. மோனா லிசா ஓவியத்திற்கு என்ன ஆனது? அதிர்ச்சி வீடியோ.. அச்சச்சோ!
Actor chiranjeevi

சிரஞ்சீவியை தமிழ் ரசிகர்கள் ஒரு தமிழ் ஹீரோவாகத்தான்  பார்கிறார்கள். ரஜினிக்கு நண்பராக  இருப்பதும் இதற்கு ஒரு காரணம். தமிழ் ரசிகர்களும் கொண்டாடும் சிரஞ்சீவியை பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள இந்த நேரத்தில் வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com