வீசப்பட்ட சூப்.. மோனா லிசா ஓவியத்திற்கு என்ன ஆனது? அதிர்ச்சி வீடியோ.. அச்சச்சோ!

Protesters poured soup over the Mona Lisa painting.
Protesters poured soup over the Mona Lisa painting.

பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மோனாலிசா ஓவியத்தின் மீது போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

1519 ஆம் ஆண்டில் தலை சிறந்த ஓவியர் Leonardo da Vinci-ஆல் வரையப்பட்ட மோனா லிசா ஓவியம் உலகின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஓவியம் தற்போது பாரீசில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளது. 

அதிக பாதுகாப்பு இருந்தாலும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று ஓவியத்தை அனைவரும் காண அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று இந்த ஓவியத்தை காணச் சென்ற சிலர் திடீரென அதன் மீது சூப்பை ஊற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரான்ஸ் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசி உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பல குறைபாடுகளை முன்வைத்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த காணொளியில் மோனோலிசா புகைப்படம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையத்தை மீறி இரண்டு பெண்கள் அங்கு சென்று, மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசுவது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, அவர்கள் அணிந்திருந்த டீசர்டில் RIPOSTE ALIMENTAIR என எழுதப்பட்டிருந்தது. மேலும் “நமக்கு என்ன முக்கியம்? கலையா? இல்லை ஆரோக்கியமான உணவுக்கான உரிமையா?” என கோஷமிட்டுள்ளனர். “நமது விவசாய முறை மோசமாகி, பல விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர்” என்று அந்த பெண்கள் கோஷமிடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்செய்தி தற்போது உலகெங்கிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல வேலையாக சூப் வீசப்பட்டதில் உலகின் தலைசிறந்த படைப்பான மோனா லிசா ஓவியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இதையும் படியுங்கள்:
பயோ மெடிக்கல் கழிவுகளை எப்படி கையாள்கிறார்கள் தெரியுமா? 
Protesters poured soup over the Mona Lisa painting.

மோனா லிசா ஓவியம் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் வீசிய சூப் கண்ணாடி மீதுதான் பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த ஓவியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் RIPOSTE ALIMENTAIR அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பு பலகாலமாகவே பிரான்ஸ் நாட்டில் விவசாயத்திற்கு ஆதரவாகவும், பொது மக்களுக்கு முறையான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com