கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது!

விஜயகாந்த்
விஜயகாந்த்

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டவர் விஜயகாந்த். பலரின் மனங்களை வென்ற இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.

இந்த நிலையில் இவரின் மறைவுக்கு பிறகு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பிரேம லதா, விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதை வாங்கியிருப்போம், ஆனால் இது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது என வருத்தம் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com