பள்ளிக் கால நினைவுகளை கூறும், ‘பாபா பிளாக் ஷீப்’

பள்ளிக் கால நினைவுகளை கூறும், ‘பாபா பிளாக் ஷீப்’

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம், ‘பாபா பிளாக் ஷீப்.’ இந்தப் படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

பள்ளிக் காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிக் கால வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கலை – மாதவன், படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டைப் பயிற்சி - ஸ்டன்னர் சாம், நடனம் – அசார், பாடல்கள் - யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக், பப்ளிசிட்டி டிசைன்ஸ் - கோபி பிரசன்னா,
புரொடக்‌ஷன் மேனேஜர் – மலர்கண்ணன், மக்கள் தொடர்பு - சதீஷ் - சிவா (AIM)

இந்தப் படத்தை 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் இப்படக் குழுவினர்.

logo
Kalki Online
kalkionline.com