பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸின் அடுத்த திரைப்படம்!

Prabhas new movie
Prabhas new movie
Published on

பாகுபலி படங்களின் பெரிய வெற்றியை தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உள்ள நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்திருந்த கல்கி AD 2898 திரைப்படமும் பட்டையை கிளப்பி பாக்ஸ் ஆபிசில் அவரது பெரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபாஸ் மற்றும் இன்ஸ்டா பிரபலமான இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் பூஜை போட்டுள்ளனர். 

இந்த திரைப்படத்தை, துல்கர் சல்மான் மற்றும் மிருனாள் தாக்கூர் நடித்து புகழ் பெற்ற காதல் திரைப்படமான சீதாராமம் திரைப்படத்தை இயக்கிய  ஹனு ராகவபுடி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு சுதிப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஃபௌஜி என்று தற்காலிக பெயர் கொண்ட இந்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் எர்நேனி மற்றும் ரவிசங்கர் இணைத்து தயாரிக்கின்றனர். 

கதை: 

விடுதலைக்கு முன் உள்ள காலக்கட்டத்தில் பிரபாஸ் ஒரு ஆக்ரோஷமான போர் வீரனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் இந்திய விடுதலை போரின் பின்னணியில் , ஒரு போர்வீரனின் விடுதலை உணர்வுக்கும் அந்த நேரத்தில் அவன் வசப்படும் காதலுக்கும் நடுவில் பயணிக்கும் கதையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ஹனு ராகவபுடியின் முந்தைய திரைப்படத்தில் இருந்த  இராணுவ வீரனின் காதல் கதை போன்றே அவரது புதிய ஃபௌஜி திரைப்படத்திலும் இருக்கலாம் ஆயினும் படத்தில் நிறைய சுவாரசியங்கள் இருக்கும் என்று நம்பலாம். 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கொட்டுக்காளி -  ஒலியும் ஒளியும் ஓஹோ... படம் முடிவு ஸோ ஸோ!
Prabhas new movie

இன்ஸ்டா பிரபலமான நாயகி: 

இந்த திரைப்படத்தின் நாயகி இமான்வி தற்போது அதிக வைரல் ஆகிக் கொண்டிருக்கிறார். இவர் நடனமாடும் இன்ட்ஸ்டா ரீல்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அமெரிக்கா வாழ் இந்தியரான இமான்வி அதி வேகமாக நடனமாடுவதில் ஆர்வம் உள்ளவர். இவர் தாள் படத்தின் ரம்தா ஜோகி பாடலுக்கு நடனமாடி புகழ் பெற்றார். பிறகு குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இயக்குனர் ஹனு ராகவபுடி தனது திரைப்படத்திற்கு  ஒரு புது முகத்தை தேடும் போது இமான்வியின் வீடியோக்கள் மூலம் ஈர்க்கப்பட்டார் . அழகும் திறமையும் இன்ஸ்டா பிரபலமும் அவருக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com