பெண்களின் திறமையை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் - 'சிங்கப்பெண்ணே'!

Singappenney Movie
Singappenney Movie
Published on

தமிழ் நாட்டில் விளையாட்டை மையப்படுத்திய படங்கள் வருவது மிகக் குறைவு. அதுவும் பெண்களின் விளையாட்டு சாதனைகளை பற்றி பேசும் படங்கள் வெளி வருவது அரிது. இறுதிசுற்று, பிகில், கனா போன்ற சில படங்கள் வந்துள்ளன.

விளையாட்டு துறையில் கூட மற்ற மாநில பெண்களை ஒப்பிடும் போது, நம் தமிழ்நாட்டு பெண்களின் பங்களிப்பு என்பது குறைவாகவே உள்ளது. பெண் கல்வியில் முன்னேறியுள்ள தமிழ்நாடு பெண்களின் விளையாட்டு பங்களிப்பில் குறையுவாகவே உள்ளது. இதற்கு காரணம் 'பொம்பள பிள்ளைக்கு எதுக்கு விளையாட்டெல்லாம்' என்ற பிற்போக்கு தனமான எண்ணம்தான்.

இந்த எண்ணத்தை மாற்றும் விதமாகவும், நீச்சல் விளையாட்டில் தமிழ் பெண்ணின் சாதனை பற்றி பேசும் படமாகவும் வரும் சர்வதேச பெண்கள் தினத்தில் 'சிங்கப்பெண்ணே ' படம் வெளியாக உள்ளது.

நீச்சல் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் ஆர்த்தி என்ற பெண் இப்படத்தில் நீச்சல் வீராங்கனையாக நடிக்கிறார். "படித்து முடித்து விட்டு கல்யாணம் பண்ணிக்கோ" என்று சொல்லாமல் விளையாட போ என்று என் பெற்றோர்கள் சொன்னதால்தான் நீச்சல் விளையாட்டில் என்னால் சாதனை புரிய முடிகிறது. இது ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழ வேண்டும் என்பதுதான் இப்படத்தின் நோக்கம் என்கிறார் ஆர்த்தி.

இதையும் படியுங்கள்:
ரிலீசுக்கு தயாராகி வரும் 'விடுதலை 2'... ஷூட்டிங் போட்டோஸ் வைரல்!
Singappenney Movie

சிங்கப்பெண்ணே படத்தை சதீஷ் இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நீச்சல் குளத்தில் படம் பிடிக்க பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். படத்தின் நோக்கத்தை புரிய வைத்து, படம் எடுத்துள்ளார் டைரக்டர். நீச்சல் தெரியாததால் ஒரு நாளைக்கு சுமார் 83 பேர் வரை இறக்கிறார்கள். எனவே நீச்சலலின் தேவையை புரிய வைக்க முயற்சித்துள்ளேன் என்கிறார் இயக்குனர்.

படத்தில் நீச்சல் கோச்சாக 'ஷில்பா மஞ்சுநாத்' நடித்துள்ளார். ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவின் திரைகள் எல்லாம் துப்பாக்கி, கத்தி, அரிவாள் என ரத்தமயமாகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் மகளிர் தினத்தில் பெண்கள் திறமைக்கு முக்கியத்துவம் தரும் 'சிங்கப்பெண்ணே' காலத்தின் தேவையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com