ரிலீசுக்கு தயாராகி வரும் 'விடுதலை 2'... ஷூட்டிங் போட்டோஸ் வைரல்!

Viduthalai Part 2
Viduthalai Part 2

விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கடைநிலை காவல் அதிகாரியாக நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ்மேனன், கௌதம் மேனன், ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Viduthalai Part 2
Viduthalai Part 2
இதையும் படியுங்கள்:
கணவரை unfollow செய்த நயன்தாரா.. திரையுலகில் அதிர்ச்சி!
Viduthalai Part 2

'விடுதலை' படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாகம் வெளியாகி ஹிட்டானதைத் தொடர்ந்து, 'விடுதலை 2ம் பாகம்' எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஜனவரி மாதத்தில் விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பத்த நிலையில், இன்னும் 1 மாதத்திற்கு படப்பிடிப்பு தொடரும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com