சிம்புவின் பத்துதல!

சினி செய்தி
 பத்துதல
பத்துதல
Updated on

சிம்புவின் அடுத்த படமான 'பத்து தல' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. மாநாடு, வெந்து தணிந்தது காடு வெற்றிக்கு பிறகு சிலம்பரசனின் படங்கள் அதிகம் எதிர்பார்க்கப் படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் இருபது வயது பையனாக நடித்த சிம்பு 'பத்து தல' படத்தில் நீண்ட தாடியுடன் நடுத்தர வயது மனிதர் போல போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

சிம்பு
சிம்பு

ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.. கவுதம் கார்த்தி, கலையரசன் நடிக்கிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்து வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் ரீமேக் தான் பத்து தல. நெடுஞ்சாலை, சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பத்து தல யார்? சிம்புவா? அல்லது அனைத்து கலைஞர்களையும் இந்த பத்து தல குறிக்கிறதா? என்பதை பார்க்க, வரும் டிசம்பர் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com